இன்றைய ராசிபலன் | ஜனவரி 04, 2026 ஞாயிறு

ஜனவரி 04, 2026 ஞாயிறு

தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025
அமாவாசை19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
பௌர்ணமி04-டிசம்-2025 வியாழன்
கார்த்திகை03-டிசம்பர்-2025 புதன்கிழமை
31-டிசம்பர்-2025 புதன்கிழமை
சஷ்டி விரதம்25-டிசம்பர்-2025 வியாழன்
சங்கடஹர சதுர்த்தி08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
சதுர்த்தி24-டிசம்பர்-2025 புதன்கிழமை
பிரதோஷம்02-டிசம்பர்-2025 செவ்வாய்
17-டிசம்பர்-2025 புதன்கிழமை
  திருவோணம்23-டிசம்பர்-2025 வியாழன்
மாத சிவராத்திரி18-டிசம்பர்-2025 வியாழன்
ஏகாதசி01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
30-டிசம்பர்-2025 செவ்வாய்
அஷ்டமி12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
27-டிசம்பர்-2025 ஞாயிறு
நவமி13-டிசம்-2025 சனிக்கிழமை
28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
அரசு விடுமுறை நாட்கள்25-டிசம்பர்-2025 வியாழன்
கிறிஸ்துமஸ் பண்டிகை
திருமண நாட்கள்01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
வளர்பிறை

08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
தேய்பிறை

10-டிசம்பர்-2025 புதன்கிழமை
தேய்பிறை

14-டிசம்பர்-2025 ஞாயிறு
தேய்பிறை

15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
தேய்பிறை
திருவிழாக்கள்03-டிசம்பர்-2025 புதன்கிழமை
திருக்கார்த்திகை

19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
அனுமன் ஜெயந்தி

25-டிசம்பர்-2025 வியாழன்
கிறிஸ்துமஸ் பண்டிகை

30-டிசம்பர்-2025 செவ்வாய்
வைகுண்ட ஏகாதசி

இன்றைய ராசி பலன் | ஜனவரி 04, 2026 ஞாயிறு

மேஷ ராசி நேயர்களே, மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். சாதித்து காட்ட வேண்டுமென்ற எண்ணம் வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மிதுன ராசி நேயர்களே, நம்பிக்கையானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். தேவையற்ற பயணங்களை புறக்கணிக்கவும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்து கொள்ளவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

துலாம் ராசி நேயர்களே, நல்ல மனிதர்களின் சிநேகிதம் கிடைக்கும். சமயத்திற்கு கேற்றார் போல வளைந்து கொடுத்து போகவும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார நெருக்கடி சீரடையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி நேயர்களே, மனதில் புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். ஆடம்பரச் செலவை குறைப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி நேயர்களே, பேச்சில் நிதானம் தேவை. உறவினர்கள் வழியில் அதிக செலவுகள் வரலாம். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


ராசி பலன் வாரந்தோறும் | 29-12-2025 To 04-01-2026

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, எதிலும் தீவிரமாக யோசித்து நிதானமாக செயல்படவும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். கடன் வாங்குவதை தவிர்க்க வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. உடன் பிறந்தோரால் அனுகூலம் உண்டு. பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போகவும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். உத்யோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, திட்டமிட்ட காரியத்தை சிறப்பான முறையில் செய்ய முடியும். புது நபர்களிடம் பேசும் போது வார்த்தைகளை குறைத்து பேசவும். குடும்பத்திலும், பொது இடங்களிலும் அனுசரித்து போவது நல்லது. மனம் யோக தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். முன்பு தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடர முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து போகும், குடும்ப வரவு செலவுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறைய தொடங்கும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். ஆன்மிக விஷயங்களுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களும் உழைப்பிற்கு ஏற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் நடந்தேறும். புதிய ஆபரண பொருள் சேர்க்கை உண்டு. கொடுக்கல், வாங்கல் ஆதாயம் தரும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட கூடும். புது வாகனம் வாங்குவது குறித்த யோசனை வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் முழு மனதோடு செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெரும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களை விட எதிர்பார்க்காத விஷயங்கள் தான் அதிகம் நடக்கும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வெளியிடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் நலம் பலம் பெரும். பிரியமானவர்கள் வழியில் சில மனக்கசப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலமான கிடைக்கும். கடன் பிரச்சனை பாதியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருந்து வரும்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திட்டமிட்ட பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். ஆன்மீக பெரியவர்களின் ஆசி கிட்டும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். பொருளாதார நிலையில் லேசான பின்னடைவு ஏற்படலாம், இருப்பினும் சமாளிக் கூடிய சாமர்த்தியம் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். ஆன்மீக சிந்தனை உண்டாகும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நிறைய நன்மைகளும் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புது திட்டம் ஒன்றை தீட்டி அதை செயல்படுத்த முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கவனமாக பழகவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். உடல் நிலை சீராக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். தேவையில்லாத விஷயங்களுக்கு கவலைப்படுவதால் மன சஞ்சலம் ஏற்படும். பண விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சில நன்மைகள் உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கும், செயலுக்கும் மரியாதை ஏற்படும். பெற்றோர்களின் அறிவுரை கிடைக்கும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத கவலை விலக ஆரம்பிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். பயணங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.

பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உணவு பழக்கங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க திட்டமிடலாம். புது நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் செலவுகள் தற்சமயம் அதிகரித்து காணப்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற ஏற்படும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். திருமண முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வேண்டியவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அண்டை, அயலாரிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

பரிகாரம் :தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியும். புதிய முயற்சிகள் எதையும் தற்சமயம் வேண்டாம். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதியவர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். வருமானம் சீராக இருந்துவரும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை காணப்படும். உடல் நலம் சீராக இருக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. வண்டி, வாகனங்களால் செலவுகள் வரும். உத்யோகம் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவதால் பல நன்மைகளை அடைய முடியும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். சில சமயங்களில் யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளடைவில் சீரடையும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். வாகன பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்


தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025
(2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025)

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :

07/12/2025 தனுசு – செவ்வாய்
16/12/2025 தனுசு – சூரியன்
24/12/2025 மகர – சுக்கிரன்
29/12/2025 தனுசு – புதன்



ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology)

டிசம்பர் மாத ராசி பலன்கள் (2025)

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.

சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கடக ராசி அன்பர்களே

கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்



சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மகர ராசி அன்பர்களே

மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மீன ராசி அன்பர்களே

மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


Leave a Reply