இன்றைய ராசிபலன் | 05 ஜனவரி 2026 திங்கள்

ஜனவரி 05, 2026 ஞாயிறு

தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025
அமாவாசை18-ஜனவரி-2026 ஞாயிறு
பௌர்ணமி03-ஜனவரி-2026 சனிக்கிழமை
கார்த்திகை27-ஜனவரி-2026 செவ்வாய்
சஷ்டி விரதம்24-ஜனவரி-2026 சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி06-ஜனவரி-2026 செவ்வாய்
சதுர்த்தி22-ஜனவரி-2026 வியாழன்
பிரதோஷம்01-ஜனவரி-2026 வியாழன்
16-ஜனவரி-2026 வெள்ளி
30-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
  திருவோணம்19-ஜனவரி-2026 திங்கள்
மாத சிவராத்திரி17-ஜனவரி-2026 சனிக்கிழமை
ஏகாதசி14-ஜனவரி-2026 புதன்
29-ஜனவரி-2026 வியாழன்
அஷ்டமி11-ஜனவரி-2026 ஞாயிறு
26-ஜனவரி-2026 திங்கள்
நவமி12-ஜனவரி-2026 திங்கள்
27-ஜனவரி-2026 செவ்வாய்
அரசு விடுமுறை நாட்கள்01-Jan-2026 Thursday
ஆங்கிலப் புத்தாண்டு
15-Jan-2026 Thursday
தைப் பொங்கல்
16-Jan-2026 Friday
மாட்டுப் பொங்கல்
17-Jan-2026 Saturday
உழவர் திருநாள்
26-Jan-2026 Monday
இந்திய குடியரசு தினம்
திருமண நாட்கள்28 -ஜன-2026 புதன்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்03-ஜனவரி-2026 சனிக்கிழமை
ஆருத்ரா தரிசனம்

11-ஜன-2026 ஞாயிறு
கேற்போட்ட நிவர்த்தி

14-ஜன-2026 புதன்கிழமை
போகிப் பண்டிகை

15-ஜன-2026 வியாழன்
தைப் பொங்கல்

16-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
மாட்டுப் பொங்கல்

16-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
திருவள்ளுவர் தினம்

17-ஜனவரி-2026 சனிக்கிழமை
உழவர் திருநாள்

18-ஜன-2026 ஞாயிறு
தை அமாவாசை

25-ஜன-2026 ஞாயிறு
ரத சப்தமி

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் காத்துகொண்டு இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே, மனம் தெளிவு பெரும். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி அன்பர்களே, குடும்ப நன்மைக்காக உழைக்க வேண்டிவரும். வேற்றுமதத்தவர் உதவுவர். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே, சொந்தங்களால் வந்த வருத்தங்கள் அகலும். ஆன்மீக நாட்டம் கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி ராசி அன்பர்களே, எல்லாரிடமும் நட்புடன் பழகும் சுபாவம் இருக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டு. வேண்டியவர்கள் சிலர் பகைமை பாராட்டுவர். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். புதிய முயற்சிகள் பலிதமாகும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

விருச்சிக ராசி அன்பர்களே, எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பிரியமானவர்கள் வழியில் மகிழ்ச்சி வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி அன்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஆதாயமில்லாத செயல்களால் அலைச்சல் ஏற்படும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி அன்பர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

கும்ப ராசி அன்பர்களே, அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போகவும். மனதிற்கு இதமான செய்தி வரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி அன்பர்களே, குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் இறங்கி அதில் ஒரு நல்ல அனுபவத்தை பெற முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது எல்லா வகையிலும் நன்மையைத் தரும். முன்பு வர வேண்டிய வாய்ப்புகள் உங்களது கவன குறையால் கைநழுவி போய் இருக்கலாம், இருப்பினும் மீண்டும் முயற்சி செய்தால் அதை திரும்ப பெற முடியும். நண்பர்களுக்கு உற்ற நேரத்தில் ஆலோசனையை வழங்க முடியும். எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல் படவேண்டியது மிக முக்கியம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை குறைத்து பேசவும். எதிர்பார்த்து காத்திருந்த காரியம் வெகு சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் பல நல்ல சிந்தனைகள் உதிக்கும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் கூட வேகமாக நடக்கத் தொடங்கும். மற்றவர்களின் மனதைத் புரிந்துகொள்ள முயற்சிசெய்வீர்கள். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டு. பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிப்படவும்

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிக்க முடியும். மனதில் போட்டு வைத்த திட்டங்கள் நிறைவேறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் மேற்கொள்வது சிறப்பான பலனை தரும். மகிழ்ச்சி தரக்கூடிய பயணங்கள் அமையும். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும் ஆதரவாக இருப்பர். பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடல் உபாதைகள் தோன்றி மறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். வர வேண்டிய பணம் சிறிது தாமத்திற்கு பின் கைக்கு வரும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் திட்டமிட்டபடியே எல்லா காரியத்தையும் செய்ய முடியும். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஒரு காரியம் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. அடிப்படை வாழ்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறை இருக்காது. உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது பல வகையில் நன்மை தரும்.புது வீடு மனை வாங்கும் எண்ணம் வரும். உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். உங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

பரிகாரம் : தினமும் சூரிய வழிபாடு செய்யவும்

சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் இருக்கும். மனதில் குழப்பங்களும், கவலைகளும் இருந்துகொண்டே இருக்கும். உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் இருக்கும். உறவினர்கள் வழியில் ஏதாவது பிரச்சனைகள் வரலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்ற முடியும். பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கூடும். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா நிகழ்சிகளில் கலந்துகொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டாம். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிப்படவும்

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகமும் இருக்கும். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். கையில் எடுத்த காரியங்கள் சிறப்பாக முடிக்க முடியும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிவரும். குடும்ப ரகசியங்களைப் யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். குடும்ப வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உடல் நிலையில் இருந்து வந்த கஷ்ட சூழ்நிலை நீங்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வசதிகள் பெறுக வழி பிறக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆலய வழிபாடு மனஅமைதியை தரும். பொருளாதார சிக்கல்கள் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். உங்கள் செயல்திறனை கண்டு மாற்றவர்கள் ஆச்சரியப்படுவர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உடல் நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக இருக்கும். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சுப செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி வரும். பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெரியோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எங்கும், எதிலும் நிதானம் தேவை. கொடுக்கல், வாங்கலை தவிர்க்கவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் தொடங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். பெற்றோரின் அன்பும். ஆதரவும் கிட்டும். புது நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கடன் வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வாகன பயணத்திலும் சாலையிலும் கவனம் தேவை. உத்யோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

பரிகாரம் : சிவன் கோவிலுக்கு சென்று வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து போகவும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். எதிலும் மனநிறைவு இருக்கும். பெற்றோர்கள் ஆசி கிட்டும். உடல் நலம் சீராகும் உறவினர்களிடம் வீண் சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் கவனம் அவசியம். வீடு, மனை ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பணம் எந்த வித தடையுமின்றி வரும். நண்பர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும். யாருக்கும் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். காரிய தடை விலகும். தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிப்படவும்

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் பட்டதை தைரியமாக பேசும் துணிச்சல் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க புது உத்திகளை கையாள வேண்டிவரும்.பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சில ஆதாயங்கள் உண்டு. நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தர இயலும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப வளர்ச்சியில் உங்கள் பங்கு அதிகமாக இருக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வழி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்திற்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வருங்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகம் இருக்கும். மனதில் நினைத்திருந்த விஷயம் எளிதில் முடியும். புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். உங்களுடைய நல்ல செயல்களால் பெயர், புகழ் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த பணம் சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். பெண்கள் வகையில் சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

பரிகாரம் : நவக்கிரத்தை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கப்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப விரையங்களால் பணம் நிறைய செலவாகும். தெய்விக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு செயல்படவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்


ஜனவரி மாத ராசி பலன்கள் 2026
01-01-2026 முதல் 31-01-2026 வரை ஜனவரி மாத கிரக நிலை விபரம்

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி முதல் தை மாதம் 17ம் தேதி வரை வாக்கிய கணிதப்படி கிரகநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்கிய பஞ்சாங்கப்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

ஜனவரி (2026) மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :

14.01.2026 மகர – சூரியன்
13.01 2026 மகர – சுக்கிரன்
16.01.2026 மகர – செவ்வாய்
17.01.2026 மகர – புதன்


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology), செல் : 9003019831

மேஷ ராசி நேயர்களே, இந்த மாத நடுப்பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கையில் நிலையான ஒரு முன்னேற்றத்தை அடைய வழி கிடைக்கும். எங்கும் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பணம் கையில் புரள ஆரம்பிக்கும். நேர்மறை ஆற்றலின் அளவு மிக அதிகமாக இருக்கும். உங்கள் செல்வத்தை அதிகரிக்கவும், ஆன்மீக பலத்தைப் பெறவும் வாழ்வில் எல்லா வகையிலும் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். கையில் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உடன்பிறப்பு வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெற்றோர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள் ஏற்படும். சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாதக் கடைசியில், பண நெருக்கடி இருக்கும். ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். கணவர் மனைவிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. திருமண வரன் அமைவதில் சின்ன தடங்கல் வரும். வெளிநாடு செல்ல ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.


ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த மன அழுத்தம் மெதுவாகக் குறைந்து நிலைமை சீரடையும். சில நேரங்களில் மன அழுத்தமம், பதற்றமம் வரலாம். எல்லாவகையிலும் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். நீங்கள் எடுக்கு போகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை உயரும். வாக்கு வன்மை உண்டு. தந்தையால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தாயார் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். பூர்வீக சொத்தால் ஆதாயம் இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கல் வழியில் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகளைச் சமாளிக்க வேண்டி வரும். தூர பயணங்களின் போது, உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.


மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல பலன்களை அனுபவிக்க இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதுவரை, உங்கள் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எதிர்பாராத வகையில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்ல oru சூழல் உருவாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை இருக்கும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. மனோ தைரியம் அதிகரிக்கும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சில பிரச்னைகள் வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. நட்பு வழியில் நல்லது நடக்கும், எதிலும் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பிறகே வரன் அமையும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கடன்வாங்காமல் செலவுகளை சமாளிப்பது எதிர்காலத்திற்கு நன்மைகள் செய்யும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகக்கூடும்.


கடக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. மாதத்தின் முதல் பாதியில் பல நல்ல பலன்கள் கிடைக்கும். இரண்டாம் பாதியில் தேவையற்ற பதற்றம் மற்றும் பயத்தை உருவாக்கலாம், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வந்து நீங்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். வீடு, சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வரவிற்கு மிஞ்சிய செலவுகள் கவலையை அளிக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் மன நிம்மதியைப் பாதிக்கும். உறவினர்களிடையே கருத்து வேற்றுமை வரும். விவாக முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். திருமணம் முயற்சிகளில், தடங்கல்களும் தாமதங்களும் ஏற்படும். எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. பழைய கடன்கள், கவலையை ஏற்படுத்தும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு.


சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல பிரச்சனைகளுடன் கூடிய மற்றொரு அழுத்தமான மாதமாக இருக்கும். உங்களுக்கு வெவ்வேறு பக்கங்களிலிருந்து அழுத்தங்கள் வரும், ஆனால் மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். மேலும் பல தடைகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். முன்னேற்றத்தை சந்திக்க பல நாட்கள் சிக்கித் தவிக்க நேரிடும். மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண விரையம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் வந்தாலும் விடா முயற்சி வெற்றி தரும். பழைய கடன்கள் அடைப்படும். விவாக முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்களும், தாமதமும் விலகி, நல்ல வரன் அமையும். உங்கள் தனி திறமைகள் வெளிப்படும்.


கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் பல விஷயங்களில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மேலும் நிலையான ஒரு முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். குடும்ப சூழலிலும் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த பதட்டமான தருணங்கள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். உங்கள் பேச்சில் இனிமை கூடும். உடல் சோர்வு, உடல் சோர்வு அசதி வந்து நீங்கும். உங்கள் கடுமையான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். கூடும், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி கிட்டும். தாயால் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகள் பலம் குறையும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தந்தை உறுதுணையாக இருப்பார். யாரையும் குறை சொல்ல வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண முயற்சிகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு, வரன் அமையும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருப்பினும், அதை சமாளித்துவிட முடியும்.


துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் வரும் நல்ல செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த முடியும். பேச்சில் அதிக கவனம் தேவை. பண வரவு இருக்கும். முதலில் சிறிய முன்னேற்றங்களையும் பின்னர் பெரிய முன்னேற்றங்களையும் எதிர்பார்க்க முடியும். நீங்கள் ஏற்கனவே பல சோதனை கட்டங்கள் மற்றும் சவால்களை கடந்து வந்துளீர்கள் இந்த மாதம் தொடக்கம் மெதுமாக இருக்கும். எந்த விஷயத்திலும் திடமாக முடிவெடுத்து எடுக்க முடியும். குடும்பத்தில்இதமான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் தேவையான பொருள் சேர்க்கை உண்டு. வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தந்தையால் அனுகூலம் உண்டு. குடும்பம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் கட்டுக்கடங்கியே இருக்கும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளும் பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டாலும், பெரிய அளவில் ஒற்றுைமக் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும்.


விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் எளிதாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் உங்கள் செலவினங்களை அதிக கவனத்துடன் திட்டமிட வேண்டும். இது மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும். இந்த மாதம் முழுவதும் நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட கால பதற்றம் மெதுவாக நீங்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் வரும். எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெரும் சாமர்த்தியம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனம் தேவை. சொத்து விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்வில் தடைகள், ஒரு சில பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை தவிர்ப்பது அவசியம். வெளி உணவுகளை ஆறவே தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். இரவு நேர வாகன பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய தொழில், வியாபார முயற்சிகள் கைகூடும்.


தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மாதத்தின் இரண்டாம் பாதிக்கு மேல் மனம் நிம்மதியடையக்கூடிய விஷயங்கள் நடக்கும். கடைசி வாரத்தில் உங்கள் அழுத்தம் குறைந்த பின் நீங்கள் ஒரு சிறிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்வில் ஏற்றமான வாழ்வில் ஏற்றமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்குநல்ல மதிப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடன்பிறப்பு களால் நன்மை உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களில் செலவினங்கள் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகளால் பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விட முடியும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதம் ஏற்படும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப்பற்றாக் குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகமாகவே இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவைத் தவிர்க்க இயலாது. குடும்ப வருமானத்தைவிட, செலவுகள் தான் ஒரு படி கூடுதலாக இருக்கும், ஆதலால், திட்டமிட்டு செலவு செய்தல் மிகவும் அவசியம், இல்லாவிடில் புதியகடன்களை ஏற்க வேண்டிவரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.


மகர ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்க்கை முறையை சிறப்பாக மேம்படுத்தும் பல மாற்றங்களை நீங்கள் சந்திக்கக்கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தை இந்த ஜனவரி மாதம் முதல் நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக, பல வருடங்களுக்குப் பிறகு கொண்டாட்டத்திற்கு இது ஒரு நல்ல மாதம். எதிலும் உற்சாகத்துடன் செயல்பட தொடங்கவும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் வந்து நீங்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. பூர்வீக சொத்து வகையில் ஆதாயம் உண்டு. கணவன்,மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருத்தல் அவசியம். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். வெளியில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், சிறு தடங்கல்களும், பிரச்னைகளும் ஏற்பட்டு, அதன் பின்பு வரன் நிச்சயமாகும். ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் வந்தாலும் விடாமுயற்சியால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.


கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனம் அமைதி பெரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜென்ம சனி விலகி விட்டதால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறிது நிம்மதியைத் தரும், ஆனால் இந்த நிம்மதி உங்களுக்கு எந்த வளர்ச்சியையும் அல்லது செல்வத்தையும் கொண்டு வராது. அதாவது இந்த மாதம் முழுவதும் மந்தமாக தான் இருக்கும். இப்போது உள்ள குடும்ப சனி உங்களுக்கு பல விஷயங்களை தாமதப்படுத்தலாம். நீங்கள் இன்னும் சில காலம் எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் தான் தவிக்க நேரிடும். ஒரு சில உடல் உபாதைகள் வரலாம். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். கடன்கள் குறைய ஆரம்பிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நண்பர்களால் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலும், திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். இந்த மாத இறுதியில் அதிக செலவுகள் வரும்.


மீன ராசி நேயர்களே, இந்த மாதம் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் சக்தியும், சாமர்த்தியமும் உண்டாகும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இந்த மாதம் பல சோதனைகளை கடந்து வர வேண்டியிருக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும். வீண் வாக்குவாதத்தை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருப்பினும், வீண் செலவுகளில் பணம் விரயமாகும். ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவர் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் காரணமில்லாத அச்சமும், கவலையும் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.


Leave a Reply