கப்டன் மெடின் மாஸ்ரர் | 10.01.1991

10.01.1991 | நெடுந்தீவு

யோகநாதன் பிரதாபன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 19.12.1967
வீரச்சாவு: 10.01.1991

துயிலுமில்லம்: எள்ளங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


தமிழகத்தில் அமைந்துள்ள புலிகளின் 6-வது பயிற்சிப் பாசறையில் ஒரு  நாள் -“சாப்பிட வரட்டாம் ! சாப்பிட வரட்டாம்  என்று சொல்லிக் கொண்டே வந்தான் மாஸ்டர். தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த கொட்டில்கள் ஒவ்வொன்றையும் எட்டிப் பார்த்துச் சொன்னபடியே சென்று கொண்டிருந்தான்.

அங்குதான் பயிற்சிக்கென வந்த போராளிகள் அனைவரும் தங்கியிருந்தனர். வழக்கத்தில் மணியோசை மூலமே சாப்பிட வருமாறு அழைப்பார்கள். இன்று மணியின் வேலையை மாஸ்ரர் செய்கிறானே என்று எண்ணினாலும் எல்லோரும் அவரவர் சாப்பாட்டுக்  இக் கோப்பையை எடுத்தபடி வரிசையாக நிற்கத் தொடங்கினர். மாஸ்ரருக்கும் மனதிற்குள் சிரிப்பு – எல்லோரையும் தான் பேய்க்காட்டி விட்டதாக.

அந்த முகாமிற்கு சமைப்பதற் கெனச் சென்ற போராளிக்ளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தாங் கள் மணியோசை எழுப்பவில்லையே? ஏன் இவர்கள் வரிசையாக நிற்கின்றார்கள்? பொன்னம் மான் இதைப்பார்த்துக் கொண்டிருந்தார். இது மாஸ்ரரின் வேலைதான் என்று தெரிந்து விட்டது. எல்லோரையும் அப்படியே நிற்கச்சொல்லிவிட்டு இன்னும் சாப்பாடு தாயராகவில்லை’ என்று ஒவ்வொருவராக கூப்பிட்டுச் சொல் என்று கட்டளை பிறப்பித்து விட்டார். அந்த முகாயில் மொத்தம் 329 பேர். தன்னைத்தவிர்த்து மிகுதி 328 பேருக்கும் தனித்தனியாக சொல்ல வேண்டிய நிலைமை. ஆரம்பத்தில் இதைச் சொல்வது அவரஸ்டமாகத்தான் இருந்தது. எனினும் போகப்போக சொல்ல முடியாதபடி களைத்துவிட்டான். இறுதிக்கட்டதில் அழுகையே வரும் நிலைமை ஏற்பட்டது அவனுக்கு. இப்படியான ஒரு கலகலப்பான பேர்வழியாகத் தான் தன்னை இனங்காட்டிக் கொண்டான் மாஸ்ரர். அந்த முகாமில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் இவன் நீக்ரோ போல வேடமிட்டு ஆடியதும் இவனுடன் பயிற்சி எடுத்த போராளிகளால் மறக்கப்படமுடியாத சம்பவங்களாகும்.

நடுத்தரக் குடும்பத்தை சற்று வசதியான குடும்பம். 1977. ம் ஆண்டுவரை இவன் கொமும் பிலேயே கல்வி கற்றான். அக் காலகட்டத்தில் கொமும்பிலிருந்து புறப்பட்ட அகதிக் கப்பல்கள் ஏனையோரைப் போலவே இவனுக்கு சொந்தமண்ணை இனக்காட்டின. கப்பலில் வந்தோரில் அனேகர் தாம் அகதி என்ற நினைப்புடன் வந்தனர். பத்து வயது சிறுவனாக இருந்த இவனோ போராளியாவதற்குரிய விதையை நெஞ்சில் சுமந்தனாக வந்து சேர்ந்தான்.

1983-ம் அண்டுக் கலவரத்தை தொடர்ந்து போராளிகளாவதற்கான அழைப்புகள் எங்கும் நிறைந்து காணப்பட்டன. சம்மதமென்றால் உடனே அடுத்த வண்டியில் (படகு) அனுப்பத்த யாராக பல இயக்கங்கள். ஆனாலும் இவன் வடிகட்டல் முறையில் போராளிகளை உள் வாங்கும் புலிகள் அமைப்பிலேயே இணைந்து கொள்ள விரும்பினான். கப்டன் லால ரஞ்சன், லெப் கந்தன், சொக்கன் போன்ற போரானிகளுடன் இ ணந்து செயற்பட்டான். பகுதி நேர உறுப்பினராக இவன் செயற்பட்டு விட்டு வீடு திரும்பும் ஒவ் வொரு நாளும் இவனது பெயரைச் சொல்லி ஒவ்வொரு தும்புக்கட்டை முறியும் . அந்தச் சந் தர்ப்பத்தில் இவன், தான் அகதியாக வந்ததை நினைத்துக் கொள்வான். அந்தநிலை தனது குடும்பத்தினருக்கும்

தனது இனத்திற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக அதைத் தாங்கிக் கொண்டான். வீட்டில் விழும் அடிகள் முழுநேர உறப்பினராகத் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு இயக்கத்தினரை நச்சரிக்கவைக்கும். எனினும் இவனை மேலும் சோதித்துப் பார்க்க விரும்பிய அவர்கள், இவனை மாதக்கணக்காக ஒரு வீட்டில் தனியறையில் விட்டு மறைவாக இருந்துகொல் என்று சொன்னார்கள். இவன் பொறுமை இழந்து போகிறானா என்று பார்க்கவே இந்த ஏற்பாடு இவனது வீட்டிலிருந்து

அரை மைல் தூரத்திலேயே இவன் தங்க வைக்கப்பட்டிருந்தும் இவன் பொறுமையிழ்த்து செல்லவில்லை எனவே பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.

பயிற்சி முடிந்ததும் இவன் மருத்துவப்பயிற்சி பெறும் குழுவில் சேர்க்கப்பட்டான்.

1984 அம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்த இவன் 87 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்படும் வரை தமிழகத்திலேயே தங்கியிருந்தான். போர்க்களத்தில் நிற்பதே இவனுக்கு பிரியமானது எனினும் அக்காலகட்டத்தில் இவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  

போரில் காயமடைத்து வரும் போரானிகளை இவன் பாராமரிக்கும் முறை இவனது தேவையை மருத்துவக்குழுவிற்கு உணர்த்தியது. அதனால் இவன் தமிழகத்திலையே தங்கியிருக்க நேர்ந்தது. இக்காலகட்டத்தில் மிக முக்கியமான அறுவைச்சிகிச்சைகளுக்கு இவனே உதவியாளனாக அழைக்கப்பட்டான். சத்திர சிகிச்சை நிபுணர்கள் இவனது ஆர்வத்தையும் கடமை உணர்வையும் மெச்சினர்.

இவன் குழந்தைகளில் மிகவும் பிரியமானவன். குழந்தைகள் தன்னில் பிரியமாக இருக்குமாறும் நடந்துகொள்வான். இவனது மருத்துவமனையைச் சூழ இருந்த குழந்தைகள் தான் இவனது மருமக்கள் நண்பர்கள் உறவினர்கள். அதனால்தான் இன்று மாஸ்ரர் என்ற பெயரைச் சொன்னாலே கண்கலங்குகின்றனர் அப்பகுதி மக்கள்.

எப்படியோ தாய் மண்ணை மிதிக்கப் பாக்கியம் கிடைத்தது. எனினும் இந்தியப்படையினரின் போக்கு மாஸ்டர் மீண்டும் தமிழகத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இந்தியப் படையினருடனான போரில் காயமடைந்தவர்கள் மாஸ்ரரின் பராமரிப்பில்தான் மீண்டும் சுகமடைந்தனர். காலத்தில் மேலதிக சிகிச்சைக்காக ஒரு போராளியை வேறோர் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் மதுரையிலும், சென்னையிலும் கைது செய்யப்பட்டவர்களில் இவன் அடங்கவில்லை பின்னர் இவன் தமிழகத்திலிருந்து வன்னிக்காடு நோக்கிச் சென்றான்.

இதைத் தொடர்ந்து மிகவும் நெருக்கடியான காலகட்டம். மிகவும் பாரிய காயங்களென்றாலும் தமிழகத்துக்குக் கொண்டு செல்லமுடியாது. எனினும், அந்தக் குறையை  பெருமளவு நிவர்த்தி செய்தவன் இவனே. மதுரையில் இவன் அக்கறையுடன் பழகிய மருத்துவப் பயிற்சி போராளிகளுக்கு பெரிதும் பயன்பட்டது. தானாகவே முற்சியெடுத்து இவன் செய்யும் சிகிச் சைகள் நீண்டகால அனுபவம் மிக்க மருத்துவர்களையே மூக்கில் விரல் வைக்க வைத்தது. நாளடைவில் மருத்துவக் குழுவினருக்கு பயிற்சியளிப்பவனாகயும் மாறினான். விடுதலை உணர்வோடு அவர்களை உருவாக்குவது -மருத்துவக் குழுவிலுள்ளோரின் பொறுப்புக்களை உணர்த்துவது திட்டமிட்ட செயற்பாடு எல்லாம் தனிப் பாணியாக இருந்தன.

நாளடைவில் இவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவக் குழுவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். சிறிலங்காப் படைகளுடன் மீண்டும் போர் தொடங்கிய பின்னர் முல்லைத்தீவு முகாமை முற்றுகையிட்டு நிகழ்ந்த போர், மாங்குளம் இராணுவமுகாம் மீதான

தாக்குதல் என்பனவற்றில் இவன் நித்திரையை மறந்து பணியாற்றினான். மிகக்குறைந்த அடிப்படை வசதிகளே இருந்தும் ஒரு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் உணர்வினை போராளிகளுக்கு ஏற்படுத்தினான். மருத்துவக் குழுவின் தேவை கருதி மீண்டும் தமிழகத்துக்கு பிரயாணம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது இவனுக்கு 10.01.1991 அன்று தமிழகத்திலிருந்து மருந்துப் பொருட்களுடன் இவன் படகில் வந்து கொண்டிருந்தான். அப்படகைக் கண்ட சிறிலங்கா கடற்படையினர் இவர்களைத் துரத்தினர். படகு பத்திரமாக நெடுத்தீயுக் கரையை வந்தடைந்தது. அவசர அவசரமாக மருந்துப் பொருட்களை இறக்கினான். அவற்றைப் பவுத்திரப் படுத்தினான். அச்சமயத்தில் கடற்படையினர் இவர்களை நோக்கித் தாக்குதல் தொடுத்தனர். மாஸ்ரர் எதிர்த் தாக்குதல் தொடுத்தான். பலபேரின் உயிர்களைக் காத்த மாஸ்ரரின் உயிரைக் காப்பாற்றுமளவுக்கு அன்றைய நிலைமை இருக்கவில்லை. இயற்கையோடு போராடி அழுது கொண்டிருக்கும் நெடுந்தீவு மக்கள் இவனுக்காகவும் அழுதனர். 

1977 இல் கொழும்பிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தாலும் 1983 இனக் கலவரத்தில் பதிக்கப்பட்டோரைக் கண்டிருந்தாலும் 1984 செப்டம்பர் 1 ம் திகதி நடந்த சம்பவங்களே இவனை மிகவும் பாதித்திருந்தன. அன்று பருத்துறை நவீன சந்தையிலுள்ள கடைகள் சிறிலங்கா பொலிஸ் படையினரால் தீக்கிரையாக்கப்பட்டன. காந்திசிலை    உடைக்கப்பட்டது. தாயக மண்ணிலேயே தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவன் கல்வி கற்ற காட்லிக்கல்லூரியே தீக்கிரையாக்கப்பட்டது. 3 பிரதான கட்டடங்கள், இரசாயன ஆய்வு கூடம், சுமார் 7500 க்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் எல்லாமே தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது சிறிலங்காவின் பொலிஸ் மா அதிபராக உருத்திரா ராஜசிங்கம் என்ற தமிழரே இருந்தார். அவர் இதனை விசாரணை செய்யலாம் என சிறிலங்கா அரசு கூறியது:

விசாரணைகள், ஆணைக்குமுக்கள் பற்றிய செய்திகள் சிறிலங்காப் படையினரைப் பொறுத்த வரை கடலை சுற்றத்தான் பயன்படும். 1977 இல் இனக்கலவரம் பற்றிய சன்சோனி கமிசன் 1979 இல் இன்பம், செல்வம் முதலானோரின் மரணம் பற்றி லலித் அத்துலத் முதலி தலைமையிலான தெரிவுக்குமு. 1981 இல் யாழ்ப்பாண நூலகம், கூட்டணிக் காரியாலயம், ஈழ நாடு காரியாலாம் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பான லயனல் பெர்னாண்டோ தலைமையிலான கமிசன், 1985 இல் திம்புப் பேச்சு வார்த்தை நடந்த சமயம் வவுனியாவில் சிறிலங்காப் படையினரால் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டது பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட பிரிகேடியர் மனோமடவல தலைமையிலானஅணைக்குழு, கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம். எஸ். எவ் குழுவினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட விசாரணைக் குமு. 91 யூன் 11இல் கொக்கட் டிச்சோலையில் சிறிலங்காப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட மரணங்கள் தொடர்பான ஜனா திபதி ஆணைக்குழு மற்றும் இன்னோரன்ன கமிசன்கள். விசாரணகள் எல்லாம் 

சிறிலங்காப் படையினரின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினவே யொழிய வேறெதுவும் உருப்படியாக நடக்கவில்லை. ஆனால் கீறல் விழுந்த, இசைத்தட்டுப் போல ஒரு விசயத்தை மட்டுமே சொல்லின. “இனிமேல் இந்த மாதிரிச் சம்பவம் நடக்காமல் பார்க்க வேண்டும்* என்பதே சிறிலங்கா அரசு இவற்றை எப்படி நோக்குகின்றதோ 1977 ஆம் ஆண்டுக் கலவரங்கள், 1984 ஆம் ஆண்டுச் சம்பவங்கள் ஒரு மாஸ்ரரை உருவாக்கியது போல, எம் மக்கள் மீதான படுகொலை கமிசன்களில் நம்பிக்கை வைக்காத புதிய ஒரு போராட்டப் பரம்பரையை உருவாக்குகின்றன. அந்தப் பரம்பரை சொல்லும் செய்தி * இனிமேல் இப்படியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க எமது இருப்பை உறுதி செய்யத்தான் இப்போராட்டாம்

-களத்தில் 

Leave a Reply