இலங்கையின் அஞ்சல் துறை 2025 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது!

11-01-2026 | இலங்கை

இலங்கை தபால் திணைக்களமானது இலாபம் ஈட்டும் துறையாக அபிவிருத்தி அடைந்து உள்ளது. 2025ஆம் ஆண்டுக்காக திறைசேரியில் இலங்கை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானம் ஈட்டுவதில் தபால் திணைக்களம் வெற்றி பெற்றுள்ளதாக தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி, இலங்கை தபால் திணைக்களம் 13.1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், கடந்த வருடத்தில், இலங்கை தபால் திணைக்களம் புதிய ஆட்சேர்ப்புகளையும் நிரந்தர நியமனங்களையும் செய்துள்ளது. அத்துடன், புதிய தபால் அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இலங்கை தபால் சேவையின் 378 பிரதி தபால் மா அதிபர்களுக்கு 2025 ஜூன் மாதம் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும், 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதி தபால் மா அதிபர்களுக்கான முதல் நிரந்தர நியமனம் இதுவாகும்.

கடந்த வருடம் செப்டம்பரில், 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1000 தபால் உதவியாளர்களின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டதாகவும், 600 தபால் சேவை அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இந்த வருடம் பெப்ரவரியில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

ஆட்சேர்ப்பு விவரங்களை தெரிவித்த தபால் மா அதிபர், முதன்மை திறன் அதிகாரி பிரிவில் 40 தரம் ஐஐஐ அஞ்சல் பதவிகளுக்கு பணிமயர்த்த கடந்த வருடம் நவம்பரில் நியமனங்கள் வழங்கப்பட்டது.

இலங்கை தபால் திணைக்களம் 2021 முதல் எந்த நிரந்தர அஞ்சல் உதவியாளர் ஆட்சேர்ப்புகளையும் செய்யவில்லை, மேலும் 1000 பதவி வெற்றிடங்களுக்கு பணிமயர்த்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்த கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. தேவையான தகுதிகளை பூர்த்தி செய்து தபால் திணைக்கயளத்தின் ஊழியர்களாக பதிவு செய்யப்பட்ட 731 பேர் கடந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்களுக்கு திறமையான அஞ்சல் சேவையை வழங்கும் நோக்கில், கடந்த வருடம் 225 கணினிகள், பிரதி அஞ்சல் அதிகாரிகளுக்கு 1500 மடிக் கணினிகள், 500 அச்சுப்பொறிகள் மற்றும் 32 லேசர் அச்சுப்பொறிகள் திணைக்களத்திற்கு வாங்கப்பட்டதாக ருவன் சத்குமார தெரிவித்தார்.

இலங்கை தபால் சேவையை புதிய செயல்திறன் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கடந்த வருடம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை அஞ்சல் திணைக்கள போக்குவரத்திற்காக 10 புதிய பெரிய லொரிகள் மற்றும் 20 புதிய கெப்ரக வாகனங்கள் கொள்வனவு செய்ய உள்ளதாகவும், ஞளுகு நிதியின் கீழ் வழங்கப்பட்ட கூ500,000 ஐப் பயன்படுத்தி 20 மின்சார சரக்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் 165 மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்க கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலன்னறுவை புதிய தபால் நிலையமும் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் பொலன்னறுவை தபால் வளாகம் மற்றும் மட்டக்களப்பு தபால் வளாகம் ஆகியவற்றில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

Leave a Reply