“தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும்.” – த.வி.பு
தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள்

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என எமக்காய் உயிர்க்கொடை தந்த மாவீரர் கல்லறைகள் மீது புதியதொரு நாளில் நாம் உறுதியெடுப்போம்.
நாம் செல்லவேண்டிய பாதை வெகுதொலைவில் இருக்கின்றது என்ற கசப்பான உண்மையை எமக்குப் புலப்படுத்தி நிற்கின்றது.
எனினும் விடுதலையை வேண்டி நிற்கும் மக்கள் துவண்டு விடக்கூடாது.
நாம் ஆளப்பிறந்த இனம்.
எனவே நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோட வேண்டியது மிக அவசியம்.
காலம் கனியும் என்று காத்திராமல் , தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய, நாம் காலத்தைக் கனிய வைக்க முயற்சி செய்வோம்.
மலரும் தமிழ்ப்புத்தாண்டில் சுதந்திர மனிதர்களாய் ஏனைய தேசங்களோடு நாமும் ஒரு தேசமாய் வாழுவோம் என்ற நம்பிக்கையோடு தமிழீழத் தேசியத்தலைவர் சிந்தனை வழிநின்று தைப்பொங்கலை எதிர்கொள்வோம்.
உங்களனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட நல்வாழ்த்துகள்..
Liberati Tigers Of TAMIL EELAM
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
21.12.2008.
அனைத்துப் பொறுப்பாளர்களினதும் கவனத்திற்கு,
அன்புடையீர்!
தைப்பொங்கல் கொண்டாடுதல்.
எதிர்வரும் சனவரி 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள் ஆகும். இதுவே தமிழரின் புத்தாண்டாகும். தமிழரின் பண்பாட்டு வாழ்வை எடுத்துக்காட்டும் தைப்பொங்கல் தினத்தை உலகம் முழுவதும் இம்முறை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென விரும்புகின்றோம்.
இவ்விழா மூலம் தமிழரின் பண்பாட்டு மரபைக் கடைப்பிடிப்பதோடு, எமது இளையோர்களிற்கும், வெளிநாட்டவர்களிற்கும் தமிழரின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு வாழ்வியலின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் இப்பொங்கல் தினத்தை, தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுமாறு வேண்டுகின்றோம்.
தமிழர் தாயகத்தில் மக்கள் இராணுவப் படையெடுப்புகளாலும், இடப்பெயர்வுகளாலும், வெள்ளத்தாலும் மிகுந்த நெருக்கடிக்குள் வாழ்ந்தாலும் தமிழர் திருநாளைக் கொண்டாடத் தவறமாட்டார்கள்.
ஏனெனில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப தன்னம்பிக்கையுடன்
இந்நாள் கடைப்பிடிக்கப்படும்.
எனவே நீங்கள் வதியும் நாடுகளில் தமிழர் வாழும் அனைத்து வீடுகளிலும், கோவில்களிலும், பாடசாலைகளிலும், நகரங்களிலும், பொது இடங்களிலும் தைப்பொங்கல் தினத்தை, தமிழரின் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்.
ஆடம்பரம் இல்லாமல் தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இளையோர்களையும், வெளிநாட்டவர்களையும் இணைத்து தமிழர் தம் வாழ்வின் இன்னல்கள் நீங்கி, விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கைத் திருநாளாகத் தைப்பொங்கல் கொண்டாடப்படல் சிறப்பானதாகும்.
அன்புடன்,
க மணிவண்ணண (வீ.மணிவண்ணன்)
“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”
