“தமிழர் புத்தாண்டுப் பொங்கல் திருவிழா – 2057”
டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம் ஒன்றிணைந்து பெருமகிழ்வுடன் நடத்திய தமிழரின் பாரம்பரியத் திருநாளான புத்தாண்டுப் பொங்கல் பெருவிழா 17.01.2026 சனிக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் விழா நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமானது.
மங்கல விளக்கினை திருமதி. ரதி, திருமதி. நித்தியா மற்றும் திருமதி. ரம்யா மூவரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியினை திரு.அசோக் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை திரு. கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணராஜஸ்ரீ அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான அகவணக்கத்தோடு, பொங்கல் பாடல்கள் ஒலிக்கும் வேளையில் இருபதுக்கும் மேற்பட்ட பானைகளை அடுப்பிலேற்றி டறம், நியூகாசில் தமிழ்மக்கள் இணைந்து ஊர்கூடிப் பொங்கலிட பெரும் உற்சாகத்துடன் நிகழ்வானது தனிச்சிறப்பைத் தந்தது. இசை நிகழ்ச்சிகள், சிறுவர்களின் கலை நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தி இருந்தன.
தமிழரின் பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா முதல் முயற்சியாக இங்கே முன்னேடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்கு சகல வழிகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய உறவுகளுக்கும், நிகழ்வுக்கு வருகை வந்து சிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிவரும் காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் போன்ற நமது தேசிய நினைவேந்தல்களையும் கூட முன்னெடுப்போம் என்று உறிதியளித்து, தேசியக் கொடிகளை கையேற்பு செய்து நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
நன்றியுடன்,
டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம்




























































































































































































































































