எனக்கே இதுவரை காரணம் சொல்லவில்லை !

சென்னை புத்தகக் கண்காட்சி

தமிழம் பதிப்பகத்தின் வெளியீட்டு நூலாகிய “இந்தி எதிர்ப்பு போரில் ஈவெரா பித்தலாட்டம்” வெளியிடப்பட்டு அடுத்த நாளே காவல்துறை அடக்கு முறைக்கு உள்ளாகி பறிமுதல் செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில்தான் இந்த நூலுக்கான திறனாய்வினை ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்வை கூடுகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த நிகழ்வை தடுக்க, காவல்துறை குவிக்கப்பட்டு அந்த அரங்கை வாடகைக்கு கொடுத்த உரிமையாளரை மிரட்டி தடுத்துள்ளது நிகழ்வை.

அரங்க உரிமையாளரை அணுகி, இந்த நூல் தடைசெய்யப்பட்ட நூல், அதை திறனாய்வு செய்ய அனுமதிக்க கூடாது என்று நிறுத்தியுள்ளது.

இந்த நூல் தடைசெய்யப்பட்ட நூலா?, 1965 இல் சிவானந்த அடிகள் வெளியிட்டு பல்லாயிரம் படிகள் விற்று தீர்ந்த இந்நூல், நாம் 2023 ஆண்டு வெளியிட்டு 1000 படிகள் விற்று தீர்ந்த நிலையில் இப்போது மறுவெளியீடு செய்து வருகிறோம். இதில் அரசுக்கு என்ன சிக்கல் ?

இது ஏற்கனவே தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட நூல் என்றால், அதற்கான தடை ஆணை எங்கே ?, அப்படி தடை செய்யப்பட்ட அந்த நூலை விற்றால், விற்பனை நிறுவனத்தை, பதிப்பகத்தையோ காவல்துறை அணுகவேண்டும் தவிர, இந்த சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்ற நகச்சுவையை அரசே செய்யக்கூடாது. இது அரசு ஒரு சாதாரண மனிதனின் கருத்துரிமையின் மீது நிகழ்த்தும் போராகவே பார்க்க வேண்டும்.

இந்த நூல் குறித்து பதிப்பகத்தையோ, பதிப்பாளரையே அணுக்காத அரச அதிகாரம் நமக்கு அரங்கம் வழங்குகிறவர்களை மிரட்டி, தடைசெய்வது என்ன மாதிரியான செயல் என்று விளங்கவில்லை.

இந்த நூலை தமிழ்நாடு எங்கும் இலவசமாக கொடுக்க ஒரு 1 இலட்சம் பிரதி அடிக்கலாமா என்ற திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் புரவலர்கள் விரும்புகிறவர்கள் தங்களால் இயன்ற பிரதியை வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்.

எல்லோரும் நம்மிடம் கேட்பது, எதற்காக இந்த நூலை கண்டு திராவிட அரசு அஞ்சுகிறது ?என்ற கேள்வியே ! ஒரு பதிப்பகத்தாரா எனக்கு இன்னும், அவர்களின் பயத்திற்கான காரணம் தெரியவில்லை என்பதே உண்மை !..

சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேணும்? எதற்காக தடுக்கிறீங்க ?

இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழம் பதிப்பகத்தின் எதிர்பார்த்த விற்பனை இல்லை. உறவுகள் தங்களால் இன்ற ஆதரவினை நல்கிட வேண்டுகிறேன் !

தமிழம் பதிப்பகம்
அரங்கு எண் : 192
சென்னை புத்தகக் கண்காட்சி
YMCA நந்தனம்
பேச : 9442248351

Leave a Reply