இன்றைய ராசி பலன் – 27 ஜனவரி 2026 செவ்வாய்

27 ஜனவரி 2026 செவ்வாய்

தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025
அமாவாசை18-ஜனவரி-2026 ஞாயிறு
பௌர்ணமி03-ஜனவரி-2026 சனிக்கிழமை
கார்த்திகை27-ஜனவரி-2026 செவ்வாய்
சஷ்டி விரதம்24-ஜனவரி-2026 சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி06-ஜனவரி-2026 செவ்வாய்
சதுர்த்தி22-ஜனவரி-2026 வியாழன்
பிரதோஷம்01-ஜனவரி-2026 வியாழன்
16-ஜனவரி-2026 வெள்ளி
30-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
  திருவோணம்19-ஜனவரி-2026 திங்கள்
மாத சிவராத்திரி17-ஜனவரி-2026 சனிக்கிழமை
ஏகாதசி14-ஜனவரி-2026 புதன்
29-ஜனவரி-2026 வியாழன்
அஷ்டமி11-ஜனவரி-2026 ஞாயிறு
26-ஜனவரி-2026 திங்கள்
நவமி12-ஜனவரி-2026 திங்கள்
27-ஜனவரி-2026 செவ்வாய்
அரசு விடுமுறை நாட்கள்01-Jan-2026 Thursday
ஆங்கிலப் புத்தாண்டு
15-Jan-2026 Thursday
தைப் பொங்கல்
16-Jan-2026 Friday
மாட்டுப் பொங்கல்
17-Jan-2026 Saturday
உழவர் திருநாள்
26-Jan-2026 Monday
இந்திய குடியரசு தினம்
திருமண நாட்கள்28 -ஜன-2026 புதன்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்03-ஜனவரி-2026 சனிக்கிழமை
ஆருத்ரா தரிசனம்

11-ஜன-2026 ஞாயிறு
கேற்போட்ட நிவர்த்தி

14-ஜன-2026 புதன்கிழமை
போகிப் பண்டிகை

15-ஜன-2026 வியாழன்
தைப் பொங்கல்

16-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
மாட்டுப் பொங்கல்

16-ஜனவரி-2026 வெள்ளிக்கிழமை
திருவள்ளுவர் தினம்

17-ஜனவரி-2026 சனிக்கிழமை
உழவர் திருநாள்

18-ஜன-2026 ஞாயிறு
தை அமாவாசை

25-ஜன-2026 ஞாயிறு
ரத சப்தமி

மேஷ ராசி நேயர்களே, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். பிராத்தனைகள் நிறைவேறும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் உயரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி நேயர்களே, மனகஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் வரும். எதிர்பார்த்த வேலைகள் தாமதமின்றி முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடக ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் இருந்த நெருக்கடிகள் குறையும். பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். பகைவர்கள் விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியம் கைகூட ஆரம்பிக்கும். உறவினர்களிடம் கருத்து மோதல்கள் வரும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுக்க போகவும். யாருடைய தவறையும் சுட்டி காட்ட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகரம் ராசி நேயர்களே, எதிர் வரும் சவால்களை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் நிலையான ஒரு சந்தோஷம் இருக்கும். சேமிப்பிற்கு எதிர்பாராத செலவுகள் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி நேயர்களே, மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மிகப் காரியங்களில் நாட்டம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் ஒரு சில சிரமங்கள் ஏற்படும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். வெளி உணவுகளை தவிர்க்கவும். வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்களை சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். சுற்றி இருப்பவர்களை யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். மனத்தெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்திற்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதிய நபர்களுடன் பழகும் பொது கவனம் தேவை. உத்யோகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த முயற்சி மேற்கொண்டாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட ஒதுங்கி நிற்பர். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். உடல் ஆரோக்கியத்தைப் எந்த பிரச்னையும் இருக்காது. திட்டமிட்ட பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். புது நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிரியமானவர்களிடம் வருகை மகிழ்ச்சியை தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடக ராசி அன்பர்களே,

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். தன்னம்பிக்கையும், தைரியம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணவரவில் ஏற்ற நிலை இருக்கும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். திட்டமிட்டபடி காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே,

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புது முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்ப தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் பலம் பெரும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் போகவும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.

கன்னி ராசி அன்பர்களே,

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். கடுமையான எதிர்ப்புகளையம் தாண்டி ஜெயிக்க முடியும். மனசுமைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மேற்கொள்ள வேண்டிய பயணத்தில் சில தடங்கல் ஏற்படலாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

துலாம் ராசி அன்பர்களே,

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தை பற்றிய கவலைகள் அடிக்கடி வரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு பெருகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். பல நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே,

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நேர்மையான எண்ணங்களும், சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனசங்கடம் வராமல் தடுக்க தியானம் செய்யவும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பொருளாதார வளம் கூடும். உறவினர்களால் சில நெருக்கடிகள் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். குடும்பத்துக்காக நிறைய சிரமப்பட வேண்டியதிருக்கும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி அன்பர்களே,

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்தை காரியம் எளிதில் முடியும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். ஞாபக மறதி தொல்லை அடிக்கடி வரும். பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பயணங்களால் நன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி அன்பர்களே,

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார வளம் மேம்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடனிருப்பவர்களுடன் கவனமாகப் பழகவும். மனதில் இருந்த கவலை நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமையத்தில் கிடைக்கும். எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். சமூகத்தில் நாளல்ல மதிப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

கும்பம் ராசி அன்பர்களே,

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் உள்ள நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். குடும்பத்தில் தொலைந்து போன சந்தோஷம் திரும்ப கிடைக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிர்ப்புகள் தானே விலகும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த பகைமை நிலை மாறும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி அன்பர்களே,

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் சாதுரியமான பேச்சு பல சமயங்களில் கை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் வருந்தும் நிலை உருவாகலாம். மனக்குழப்பம் நீங்கி தெளி நிலை உண்டாகும். யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டாம். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிரியமானவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எப்போதும் நிதானமாக பேசி பழகுவது நல்லது. நீங்கள் செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.


ஜனவரி மாத ராசி பலன்கள் 2026
01-01-2026 முதல் 31-01-2026 வரை ஜனவரி மாத கிரக நிலை விபரம்

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி முதல் தை மாதம் 17ம் தேதி வரை வாக்கிய கணிதப்படி கிரகநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்கிய பஞ்சாங்கப்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

ஜனவரி (2026) மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :

14.01.2026 மகர – சூரியன்
13.01 2026 மகர – சுக்கிரன்
16.01.2026 மகர – செவ்வாய்
17.01.2026 மகர – புதன்


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology), செல் : 9003019831

மேஷ ராசி நேயர்களே, இந்த மாத நடுப்பகுதியில் இருந்து உங்கள் வாழ்க்கையில் நிலையான ஒரு முன்னேற்றத்தை அடைய வழி கிடைக்கும். எங்கும் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பணம் கையில் புரள ஆரம்பிக்கும். நேர்மறை ஆற்றலின் அளவு மிக அதிகமாக இருக்கும். உங்கள் செல்வத்தை அதிகரிக்கவும், ஆன்மீக பலத்தைப் பெறவும் வாழ்வில் எல்லா வகையிலும் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். கையில் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உடன்பிறப்பு வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெற்றோர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள் ஏற்படும். சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாதக் கடைசியில், பண நெருக்கடி இருக்கும். ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். கணவர் மனைவிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. திருமண வரன் அமைவதில் சின்ன தடங்கல் வரும். வெளிநாடு செல்ல ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.


ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த மன அழுத்தம் மெதுவாகக் குறைந்து நிலைமை சீரடையும். சில நேரங்களில் மன அழுத்தமம், பதற்றமம் வரலாம். எல்லாவகையிலும் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். நீங்கள் எடுக்கு போகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை உயரும். வாக்கு வன்மை உண்டு. தந்தையால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தாயார் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். பூர்வீக சொத்தால் ஆதாயம் இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கல் வழியில் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகளைச் சமாளிக்க வேண்டி வரும். தூர பயணங்களின் போது, உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.


மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல பலன்களை அனுபவிக்க இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதுவரை, உங்கள் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எதிர்பாராத வகையில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்ல oru சூழல் உருவாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை இருக்கும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. மனோ தைரியம் அதிகரிக்கும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சில பிரச்னைகள் வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. நட்பு வழியில் நல்லது நடக்கும், எதிலும் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பிறகே வரன் அமையும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கடன்வாங்காமல் செலவுகளை சமாளிப்பது எதிர்காலத்திற்கு நன்மைகள் செய்யும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகக்கூடும்.


கடக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. மாதத்தின் முதல் பாதியில் பல நல்ல பலன்கள் கிடைக்கும். இரண்டாம் பாதியில் தேவையற்ற பதற்றம் மற்றும் பயத்தை உருவாக்கலாம், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வந்து நீங்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். வீடு, சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வரவிற்கு மிஞ்சிய செலவுகள் கவலையை அளிக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் மன நிம்மதியைப் பாதிக்கும். உறவினர்களிடையே கருத்து வேற்றுமை வரும். விவாக முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். திருமணம் முயற்சிகளில், தடங்கல்களும் தாமதங்களும் ஏற்படும். எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. பழைய கடன்கள், கவலையை ஏற்படுத்தும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு.


சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல பிரச்சனைகளுடன் கூடிய மற்றொரு அழுத்தமான மாதமாக இருக்கும். உங்களுக்கு வெவ்வேறு பக்கங்களிலிருந்து அழுத்தங்கள் வரும், ஆனால் மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். மேலும் பல தடைகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். முன்னேற்றத்தை சந்திக்க பல நாட்கள் சிக்கித் தவிக்க நேரிடும். மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண விரையம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் வந்தாலும் விடா முயற்சி வெற்றி தரும். பழைய கடன்கள் அடைப்படும். விவாக முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்களும், தாமதமும் விலகி, நல்ல வரன் அமையும். உங்கள் தனி திறமைகள் வெளிப்படும்.


கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் பல விஷயங்களில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மேலும் நிலையான ஒரு முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். குடும்ப சூழலிலும் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த பதட்டமான தருணங்கள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். உங்கள் பேச்சில் இனிமை கூடும். உடல் சோர்வு, உடல் சோர்வு அசதி வந்து நீங்கும். உங்கள் கடுமையான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். கூடும், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி கிட்டும். தாயால் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகள் பலம் குறையும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தந்தை உறுதுணையாக இருப்பார். யாரையும் குறை சொல்ல வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண முயற்சிகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு, வரன் அமையும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருப்பினும், அதை சமாளித்துவிட முடியும்.


துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் வரும் நல்ல செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த முடியும். பேச்சில் அதிக கவனம் தேவை. பண வரவு இருக்கும். முதலில் சிறிய முன்னேற்றங்களையும் பின்னர் பெரிய முன்னேற்றங்களையும் எதிர்பார்க்க முடியும். நீங்கள் ஏற்கனவே பல சோதனை கட்டங்கள் மற்றும் சவால்களை கடந்து வந்துளீர்கள் இந்த மாதம் தொடக்கம் மெதுமாக இருக்கும். எந்த விஷயத்திலும் திடமாக முடிவெடுத்து எடுக்க முடியும். குடும்பத்தில்இதமான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் தேவையான பொருள் சேர்க்கை உண்டு. வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தந்தையால் அனுகூலம் உண்டு. குடும்பம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் கட்டுக்கடங்கியே இருக்கும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளும் பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டாலும், பெரிய அளவில் ஒற்றுைமக் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும்.


விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் எளிதாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் உங்கள் செலவினங்களை அதிக கவனத்துடன் திட்டமிட வேண்டும். இது மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும். இந்த மாதம் முழுவதும் நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட கால பதற்றம் மெதுவாக நீங்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் வரும். எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெரும் சாமர்த்தியம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனம் தேவை. சொத்து விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்வில் தடைகள், ஒரு சில பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை தவிர்ப்பது அவசியம். வெளி உணவுகளை ஆறவே தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். இரவு நேர வாகன பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய தொழில், வியாபார முயற்சிகள் கைகூடும்.


தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மாதத்தின் இரண்டாம் பாதிக்கு மேல் மனம் நிம்மதியடையக்கூடிய விஷயங்கள் நடக்கும். கடைசி வாரத்தில் உங்கள் அழுத்தம் குறைந்த பின் நீங்கள் ஒரு சிறிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்வில் ஏற்றமான வாழ்வில் ஏற்றமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்குநல்ல மதிப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடன்பிறப்பு களால் நன்மை உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களில் செலவினங்கள் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகளால் பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விட முடியும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதம் ஏற்படும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப்பற்றாக் குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகமாகவே இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவைத் தவிர்க்க இயலாது. குடும்ப வருமானத்தைவிட, செலவுகள் தான் ஒரு படி கூடுதலாக இருக்கும், ஆதலால், திட்டமிட்டு செலவு செய்தல் மிகவும் அவசியம், இல்லாவிடில் புதியகடன்களை ஏற்க வேண்டிவரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.


மகர ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்க்கை முறையை சிறப்பாக மேம்படுத்தும் பல மாற்றங்களை நீங்கள் சந்திக்கக்கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தை இந்த ஜனவரி மாதம் முதல் நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக, பல வருடங்களுக்குப் பிறகு கொண்டாட்டத்திற்கு இது ஒரு நல்ல மாதம். எதிலும் உற்சாகத்துடன் செயல்பட தொடங்கவும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் வந்து நீங்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. பூர்வீக சொத்து வகையில் ஆதாயம் உண்டு. கணவன்,மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருத்தல் அவசியம். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். வெளியில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், சிறு தடங்கல்களும், பிரச்னைகளும் ஏற்பட்டு, அதன் பின்பு வரன் நிச்சயமாகும். ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் வந்தாலும் விடாமுயற்சியால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.


கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனம் அமைதி பெரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜென்ம சனி விலகி விட்டதால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறிது நிம்மதியைத் தரும், ஆனால் இந்த நிம்மதி உங்களுக்கு எந்த வளர்ச்சியையும் அல்லது செல்வத்தையும் கொண்டு வராது. அதாவது இந்த மாதம் முழுவதும் மந்தமாக தான் இருக்கும். இப்போது உள்ள குடும்ப சனி உங்களுக்கு பல விஷயங்களை தாமதப்படுத்தலாம். நீங்கள் இன்னும் சில காலம் எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் தான் தவிக்க நேரிடும். ஒரு சில உடல் உபாதைகள் வரலாம். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். கடன்கள் குறைய ஆரம்பிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நண்பர்களால் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலும், திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். இந்த மாத இறுதியில் அதிக செலவுகள் வரும்.


மீன ராசி நேயர்களே, இந்த மாதம் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் சக்தியும், சாமர்த்தியமும் உண்டாகும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இந்த மாதம் பல சோதனைகளை கடந்து வர வேண்டியிருக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும். வீண் வாக்குவாதத்தை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருப்பினும், வீண் செலவுகளில் பணம் விரயமாகும். ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவர் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் காரணமில்லாத அச்சமும், கவலையும் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.


Leave a Reply