கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்கான ஆரம்பகட்டப் பணிகள்
கச்சதீவு
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28-01-2026) இடம்பெற்றது.
குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர்.
பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார்.
