திருகோணமலை மாநகர சபையின் திடக்கழிவு அகற்றல் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

திருகோணமலை

திருகோணமலை மாநகர சபையினால் திண்ம கழிவகற்றல் நடவடிக்கை முறையாக இடம்பெறுவதில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

நகர சபையாக இருந்தபோது ஓரளவிற்கு சீராக இருந்ததாகவும், மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கழிவு அகற்றுவதற்கு இருவாரங்களுக்கு மேல் செல்வதாகவும் இதனால் வீடுகளில் குப்பைகளை வைத்திருக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வீதியோரங்களில் குப்பைகள் வீசப்பட்டு வருவதாகவும், குப்பைகளை சேகரித்து அள்ளுகின்ற பகுதிகளில் முறையாக குறித்த குப்பைகள் அகற்றப்படாமையினாலும் வீதியோரங்களில் குப்பைகள் சிதறி காணப்படுவதாகவும் இதனால் அருகில் வசிப்பவர்கள் மாத்திரமல்லாது சுற்றுலாப் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டமும் நகர வீதிகளில் அதிகரித்து வருவதாகவும் இதனை முழுமையாக கட்டுபடுத்தாமையினால் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பல குறைபாடுகளை மக்கள் மாநகரசபையின்மேல் மக்கள் முன்வைக்கின்றார்கள்.

Leave a Reply