வெனிசுலாவின் பொறுப்பு அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி உரையாடினார், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.

புதுடில்லி

வெனிசுலா பொறுப்பு அதிபர் ரோட்ரிக்சுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அனைத்துத் துறைகளிலும் இரு தரப்பு உறவை விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறையில் உள்ளனர்.

நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கு மார்ச் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அவரின் கைதுக்கு பின்னர், அந்நாட்டின் பொறுப்பு அதிபராக டெல்சி ரோட்ரிக்சை உச்ச நீதி மன்றம் நியமித்தது. வெனிசுலா மீதான வர்த்தக தடைகளையும் அமெரிக்கா அகற்றியது.

இந் நிலையில், பிரதமர் மோடி, பொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் பேசினேன். வரும் ஆண்டுகளில் இந்தியா-வெனிசுலா உறவுகளை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஒப்புக்கொண்டோம். – இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply