தையிட்டியில் கொட்டும் மழையிலும் தமிழர்களின் போராட்டம் இடியைப் போல எதிரொலித்தது.
யாழ்ப்பாணம்
தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மழை காரணமாக கடும் சிரமங்கள் ஏற்பட்டபோதிலும், போராட்டக்காரர்கள் உறுதியுடன் திரண்டு சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், சிங்கள பேரினவாத அரசு நடத்திவரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு எதிராகவும் தங்களது எதிர்ப்பை இடிமுழக்கமாக முழங்கினர்.
