தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு; 2 மாதங்களில் ரூ.160 உயர்வு.

சென்னை, தமிழ்நாடு – 01 பிப்ரவரி 2026

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

அந்த வகையில் இன்று (பிப்ரவரி 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரித்து , ஒரு சிலிண்டர் ரூ.1,899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் ரூ.160 உயர்ந்துள்ளது.

கடந்த மாதங்கள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு:
* ஜனவரி,01,2026- ரூ.110 அதிகரிப்பு
* டிசம்பர் 01, 2025- ரூ.10.50 குறைவு
* நவம்பர் 01, 2025- ரூ.4.50 குறைவு
* அக்டோபர் 01, 2025- ரூ.16 உயர்வு
* செப் 01 , 2025- ரூ.51.50 குறைவு
* ஆகஸ்ட் 01, 2025- ரூ.33.50 குறைவு
* ஜூலை 01, 2025- ரூ.58.50 குறைவு
* ஜூன் 01, 2025- ரூ.24 சரிவு

கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே விலையில் வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply