சிங்கப்பூர், மலேசியாவில் தைப்பூச கொண்டாட்டங்கள்.

சிங்கப்பூர்

தமிழகத்தைப் போலவே மலேசியா, சிங்கப்பூரிலும் தைப்பூச விழா, பாரம்பரிய உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தார்.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவின் மெரன்கூன் சாலையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள், 3.2 கி.மீ., தூரத்தில் உள்ள தண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் பால்குடம் எடுத்து வந்தனர். கடந்த ஆண்டு பால் குடம் எடுத்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தாண்டு 19 ஆயிரம் பக்தர்கள், முருகனை வேண்டி பால் குடம் ஏந்தி வந்தனர். 350 பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். அவர்கள் வாத்தியங்களை இசைத்தபடியே வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூர் கலாசாரம், இளைஞர்கள், மனித வளத்துறை இணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மனைவி ரத்திகா வேலாயுதனுடன் பால்குடம் எடுத்து வந்தார்.

இது தொடர்பாக தினேஷ் கூறியதாவது: பக்தர்களுடன் இணைந்து எடுத்து வந்தது, ஆழமான புரிதல் ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

மலேசியா – மலேசியாவிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பத்துமலை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து முருகனை வழிபட்டனர். கோலாலம்பூரில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

Leave a Reply