தமிழக ஆளும் கட்சி நிர்வாகிக்கு எதிரான பொது நல வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அபராதம் விதித்தது.

மதுரை

திருநெல்வேலியை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ஊழல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை கோரியும் தாக்கலான பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு ரூ.1000 அபராதம் விதித்தது.

திருநெல்வேலி பண்டாரகுளம் பேச்சிபாண்டியன், ஆளுங்கட்சி நிர்வாகி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அவருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமலாக்கத்துறை இயக்குனர், மதுரை வருமானவரித்துறை கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். – இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் லக்ஷமன் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பேச்சிபாண்டியன் ஆளும் கட்சி நிர்வாகி என கூறுவதைத் தவிர, ஊழல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர் ஒரு பொது ஊழியரா என்பதை மனுதாரரால் தெளிவுபடுத்த முடியவில்லை. தவறாக புரிந்து கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கிறோம். தொகையை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். – இவ்வாறு உத்தரவிட்டனர்.

Leave a Reply