2015 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில், நிதி நிறுவனங்கள் பொதுமக்களை ₹14,326 கோடி மோசடி செய்துள்ளன.
சென்னை, தமிழ்நாடு – 03 பிப்ரவரி 2026
பத்து ஆண்டுகளில், பொது மக்களிடம் இருந்து நிதி நிறுவனங்கள் மோசடி செய்த, 14,326 கோடி ரூபாயில் வெறும், 990 கோடி ரூபாயை மட்டுமே, போலீசார் மீட்டுள்ளனர்.

ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., என, எட்டுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள், பொது மக்களிடம் முதலீடாக பெற்று, 14,326 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளன.
இத்தகைய மோசடி தொடர்பாக, கடந்த, 2015 – 2025 வரை, 10 ஆண்டுகளில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 616 வழக்குகள் பதிவு செய்து, 3,056 பேரை கைது செய்து உள்ளனர்.
பொது மக்களிடம் இருந்து, நிதி நிறுவனங்கள் மோசடி செய்த தொகையில், வெறும், 990 கோடி ரூபாயை மட்டுமே மீட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் ஒப்படைத்து உள்ளனர்.
அதிகபட்சம் சென்னையில், 592.84 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக பெரம்பலுாரில், 10 லட்சம் ரூபாயும் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, துாத்துக்குடி ஆகிய, 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணம் இன்னும் வழங்கப்படவில்லை.
பணத்தை மீட்டுத் தருவதில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.