இன்றைய ராசி பலன் | 05 பிப்ரவரி 2026 வியாழன்

05 பிப்ரவரி 2026 வியாழன்

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026
அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்
பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறு
கார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்
சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்
சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமை
பிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை
  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்
மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறு
ஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி
27-பிப்ரவரி-2026 வெள்ளி
அஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்
24-பிப்ரவரி-2026 செவ்வாய்
நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்
25-பிப்ரவரி-2026 புதன்
அரசு விடுமுறை நாட்கள்01-Feb-2026 Sunday
தைப்பூசம்
திருமண நாட்கள்06-பிப்-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை
08-பிப்-2026 ஞாயிறு
தேய்பிறை
13-பிப்-2026 வெள்ளிக்கிழமை
தேய்பிறை
15-பிப்-2026 ஞாயிறு
தேய்பிறை
16-பிப்-2026 திங்கட்கிழமை
தேய்பிறை
20-பிப்-2026 வெள்ளிக்கிழமை
வளர்பிறை
திருவிழாக்கள்01-பிப்-2026 ஞாயிறு
தைப்பூசம்
15-பிப்-2026 ஞாயிறு
மஹாசிவராத்திரி

மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மிகப் காரியங்களில் நாட்டம்மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். கையில் எடுத்த காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டை பெற முடியும். குடும்பத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த மந்த நிலை மாறும். குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே சின்ன கருத்து மோதல்கள் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் செலவுகளும் விரயங்களும் ஏற்படும். குடும்பத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : துர்கையை விளக்கேற்றி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே,

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். வெளியிடங்களில் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களும், எதிர்பாராத விஷயங்களும் நடக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வீடு மாற மாற வேண்டிய சூழல் இருக்கும். நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்க முடியும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் : ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப சூழ்நிலை திருப்தி அளிக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடுமையான முயற்சியால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை, சச்சரவுகள் வரும். வீண் செலவுகள் ஏதும் ஏற்படவும் வாய்ப்பில்லை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய வீடு, மனை வாங்குவது குறித்த யோசனை வரும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்ப தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே,

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனோதைரியம் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். தேக நலத்தில் அதிக கவனம் செலுத்தவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தெய்வ காரியங்களில் அதிக ஈடுபாடும் உண்டாகும். அண்டை வீட்டாரிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : குன்றத்தூர் முருகரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே,

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப அமைதியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். பொருளாதார பிரச்சனைகள் சீராகும். பேச்சில் எப்போதும் நிதானமும் செயலில் பொறுமையும் இருப்பது நல்லது. குடும்ப நபர்களின் செயல்கள் நன்மை அளிக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படும். உங்கள் செயல்திறனை கண்டு மாற்றவர்கள் ஆச்சரியப்படுவர். குடும்பத்தில் ஆதரவு பெருகும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெண்கள் வகையில் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முடியும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

கன்னி ராசி அன்பர்களே,

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் சொல்லும்படி இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும். சாதூர்யமாக பேசுவதால் பல இடங்களில் ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உடல் ஆரோக்யம் மேம்படும். குடும்ப ரகசியங்களை யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுப காரியங்கள் சட்டென்று முடிவாகும். உத்தியோகத்தில் சந்தோஷம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே,

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும். மன சஞ்சலம் நீங்கும். பயணங்கள் சாதகமான பலனை தரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளை தலை தூக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். முடிந்துபோன விஷயங்களை நினைத்து கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை, இனி நடக்கவேண்டியதை செய்து முடியுங்கள் வெற்றி கிட்டும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே,

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை இருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதை எதிர்த்து போராட முடியும். எதையும் சமாளிக்கும் துணிச்சல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தேவையில்லாத விஷயங்களுக்கு கவலைப்படுவதால் மன சஞ்சலம் ஏற்படும். உத்தியோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே,

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்த்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்போதும் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவர். உடன்பிறப்பு வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் சந்தர்ப்பமும், வாய்ப்பும் தானாக அமையும், கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். எதிர்பார்த்த பெரிய தொகை கைக்கு வரும். நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு முழுமையான தீர்வு வரும். குடும்பத்திற்காக நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்

மகர ராசி அன்பர்களே,

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் உடல் நலமும், மன நலமும் சீராக இருக்கும். புது நபர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். எந்த ஒரு சிக்கலையும் எளிதாக சமாளிக்க முடியும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கடன் வாங்கும் சூழல் தற்சமயம் ஏற்படாது. கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பெற்றோர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்

கும்பம் ராசி அன்பர்களே,

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சமூகத்தில் நல்ல மதிப்பு, மரியாதை கிடைக்கும். குடுமத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். பிரியமானவர்கள்களின் சந்திப்பு நிகழும். மருத்துவ செலவுகள் அவ்வப்போது வந்து போகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்பு வகையில் சில பிரச்சனைகள் வரும். யாரிடமும் வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். எந்த ஒரு பிரச்னையானாலும் சுமூகமாக கையாளவும். குடும்பத்தில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : நவகிரகத்தை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே,

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். அடுத்தவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகம் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி தானாக வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அந்நிய நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை துளசி மாலையிட்டு வழிபடவும்.


பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026
2026 – பிப்ரவரி மாத ராசி பலன்கள்
விசுவாவசு ஆண்டு தை மாதம் 18ம் தேதி முதல் மாசி மாதம் 16ம் தேதி வரை (01-02-2026 – 29-02-2026)

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2026 முதல் 29-02-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.


பிப்ரவரி மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :
பிப்ரவரி 3 புதன் ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் பயணம் செய்கிறார்
பிப்ரவரி 6 செவ்வாய் மகர ராசியில், சூரியனுடன் இணைகிறார்
பிப்ரவரி 13 சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
பிப்ரவரி 17 சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ” ஆலந்தூர் ” A. வினோத் குமார், Ph.d Astrology

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுப்பரில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர்கள் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை வரும். மனதிற்க்குப் பிடித்தமானவர்களை சந்திக்க நேரிடும். முக்கிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிவரும். பண வரவு ஒரு புறம் இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வரும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் மிகவும் அவசியம். பெற்றோர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். உத்யோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்தும் முயற்சிகள் நிறைவேறும். உங்களின் நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும். உங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி எல்லாம் வெகு சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் நன்மைகளை பெற்றிடலாம். குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய முடியும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய காரியங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் செய்து முடிக்கவும். இஷ்ட தெய்வ அருளால், மனதில் நினைத்தது நடக்கும். பணவரவு ஒரு சில தடைக்கு பின் கைக்கு வரும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை முடிந்தவரை தவிர்க்க பார்க்கவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். புது வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும். பெற்றோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் பெரியளவில் பாதிக்காது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க சிறிது தாமதமாகலாம். குடும்பத்துடன் பல முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். வெளிநாட்டில் வேலை தொடர்பான முயற்சிகளுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ள காலமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம், இரக்கம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். எந்த சூழ்நிலையையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விருப்பங்கள் நிறைவேறும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு ஒரு தற்காலிக விடிவு பிறக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது முக்கியம். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். தூரத்து பயணங்களின் போது கவனமுடன் இருக்கவும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்ய முடியும். உங்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் பாராட்டி பேசுவர். புது வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் தவிர்க்க முடியாது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதில் பழைய நினைவுகள் தொந்தரவு தரும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்களுக்கு எதிராக சில எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும், மனம் மற்றும் பண கஷ்டத்தை சீக்கிரத்தில் போக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். சிறு விஷயங்களுக்காகக்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரால் மன நிம்மதி பாதிக்கப்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். குடும்ப பிரச்னை சுமூகமான தீர்வு பெறும். அனாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். வெளி இடங்களில் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்கவும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவிடையே ஒற்றுமை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவும். வேலை மாற முயற்சி செய்யக்கூடியவர்களுக்கு முயற்சிகள் நல்ல வாய்ப்பை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. எதிலும் பொறுமை நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். திருமண காரியம் கைகூடும். புதிய முயற்சிகளுக்கு, மிகவும் சாதகமான மாதம் இது. அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குடும்ப விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது ரொம்ப அவசியம். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவர். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு புத்துணர்ச்சி தரும். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். உடல் நலம் சிறப்படையும். உடன்பிறப்புகளிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெரியோர்களின் ஆலோசனைகளும் உதவியும் உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தங்களின் மதிப்பும், மரியாதையும் தானாகவே உயரும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். .

சந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். மனோபலம் அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். தடைகள் பிரச்னைகள் குறைந்து எளிதாக எதுவும் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறப்புகள் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். எதிரிகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக வங்கியில் கடன் பெற முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். சிலருக்கு, வீடு மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம், பொறுமையாக காத்திருக்கவும். பணம் விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். பயணங்களால் மன நிம்மதியும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். ஒரு சிலர் பழைய தீர்க்க முடியாத பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். நீண்ட நாளாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் கடினமான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் விலகும். எதிலும் சுயமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் போவது நல்லது. ஏற்றத்தாழ்வு இருந்தாலும் தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்வில் சிறுசிறு தடைகள் பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிதி தொடர்பான வாய்ப்புகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். மனப்பிரச்னைகள் விலகும். சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். நெருங்கிய நண்பர்களால் ஒரு சில இடையூறுகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். குடியிருக்கும் வீட்டினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் வரவும் செலவும் சமமாகவே இருக்கும். வெளியிடங்களில் உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். தேவையற்ற மனக்கவலையை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் ஜெயிக்க முடியும். அண்டை அயலார் உதவிகரமாக இருப்பர். உற்றார், உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிரச்னைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் சமாளிக்க முடியும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். அதிக அலைச்சலும், உடல் உழைப்பும் சோர்வை ஏற்படுத்தும். உங்களை சுற்றி இருப்பவர்களின் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் வரம்பு மீறி செல்ல வேண்டாம். ணவர் மனைவியிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். எண்ணிய எண்ணங்கள், நீண்ட நாள் ஆசைகள் விடாமுயற்சியால் நிறைவேறும்.எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் வென்று வெற்றி பெற முடியும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள் மருத்துவ செலவினங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை தோன்றும். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டினில் புதிய பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். பிரியமானவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கடன் சுமைகள் இப்போது பாதியாக குறையும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் : 1,2 & 28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் அனுபவ அறிவை கொண்டு பல காரியங்களில் ஜெயிக்க முடியும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நிறைவு ஏற்படும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது கை வந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும் எதிரிகளால் பிரச்னை வந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற சவால்களை சந்திக்க நேரிடும். புத்தி சாதூர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் பல தரப்பட்ட இடையூறுகளை சமாளிக்க வேண்டிவரும். உங்களுடைய காரியங்களை எல்லாம் வெற்றிகரமாக முடிக்க முடியும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டு. பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றமும், லாபத்திற்கான வாய்ப்புகளையும் பெற்றிடலாம்.

சந்திராஷ்டமம் : 2,3,4,5 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சக்திக்கு மீறிய, வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது, போன்ற தவறுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். திருமண தொடர்பான காரியங்களை தள்ளி போடுவது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருக்கவும். அதிக அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது..உங்கள் மனதை பல நாட்களாக வாட்டி கொண்டு இருந்த விஷயங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உங்களை சுற்ற இருப்பவர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வது முக்கியம். பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் கூட தைரியமாக எடுத்து செய்ய முடியும். விஐபிகளின் அறிமுகமும், அரவர்களால் நன்மையும் உண்டாகும். உடல் நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம். சொத்துக்களில் நிலவிய பிரச்சனைகள் இழுபறியில் நீடித்து இருக்கும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுக்கல், வாங்கலில் தற்காலம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பல நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்று இருப்பவர்களால் நன்மை வந்து சேரும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், நல்ல வரன் அமையும். நெருக்கமானவர்களின் திடீர் சந்திப்பு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பிரியமானவர்கள் உதவிகரமாய் செயல்படுவர். சொத்து விவகாரத்தில் பல இடையூறுகளை சந்திக்க வேண்டிவரும். ஆடம்பர செலவுகள் கூடும். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வரும். குடும்பத்தில் சில எதிர்பாராத சில பிரச்சனைகள் வரும். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களை ஓட்டும்போது, நிதானமாகவும், கவனமாகவும் இருத்தல் அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 7,8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


Leave a Reply