நடுவானில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கொல்கத்தா, இந்தியா – 05 பிப்ரவரி 2026
236 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 பேருடன் புறப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் அந்த விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இன்ஜினில் தீப்பற்றி எரிவதை விமானி கவனித்து விட்டார்.உடனடியாக ஒரு இன்ஜினை அணைத்துவிட்டு, மற்றொரு இன்ஜின் உதவிடன் கோல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் உயிர் தப்பினர்.
தற்போது அந்த விமானம் கோல்கட்டாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
[இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு குழுவால் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.]