கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத கைக்குண்டு

கிளிநொச்சி

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் புதன்கிழமை (04-02-2026) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்ற போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளனர்.

உடனடியாக இந்த விடயம் கிளிநொச்சி பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.

நீதி மன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்திலேயே வைத்து கிளிநொச்சி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply