சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளது!
சென்னை, தமிழ்நாடு – 05 பிப்ரவரி 2026
சென்னையில் இன்று (பிப்ரவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 03) ஆபரண தங்கம் கிராம், 14,270 ரூபாய்க்கும், சவரன், 1,14,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 04), தங்கம் விலை கிராமுக்கு, 630 ரூபாய் உயர்ந்து, 14,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 5,040 ரூபாய் அதிகரித்து, 1,19,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 4,640 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.