எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்குகின்றன!

கொழும்பு, இலங்கை – பிப்ரவரி 06, 2026

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக நேரடியாகவும், மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்காக 2.795 பில்லியன் ரூபாய் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05-02-2026) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக இலங்கையின் மீனவர் சமூகத்துக்கு மோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கப்பல் தீ விபத்து காரணமாக விதிக்கப்பட்ட தடை காரணமாக பல தரப்பினருக்கும், பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன.அந்தத் தரப்பினர் ,மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபட்ட 23 பிரிவினரும், மறைமுகமாக ஈடுபட்ட 23 தரப்பினரும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இதற்கு மேலதிகமாக மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நீர்கொழும்பு கடனீரேரியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களுக்கு ஏற்பட்ட சேதங்களும் அடையாளப்படுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், மீன்பிடி சமூகத்தினருக்கும் நட்டஈடு வழங்கப்பட்டது.முதலாம் கட்டத்தின் கீழ் மீனவர்களுக்கும், மீன்பிடித் துறையைச் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக க ப்பலின் காப்புறுதி திணைக்களத்திடமிருந்து 56,909,321.48 அமெரிக்க டொலர் நட்டஈட்டுத் தொகை கோரப்பட்டது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மேன்முறையீட்டு கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர், 2,280,299.58 அமெரிக்க டொலர் மேலதிக தொகையொன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாகக் கப்பலின் ஊடாகக் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து மீண்டும் கோரப்பட்டது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடு வழங்குவதற்காக இதுவரை 4 சந்தர்ப்பங்களில் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 2,980,514,710.16, ரூபா நட்டஈட்டுத் தொகை கிடைத்துள்ளது.அடையாளங்காணப்பட்ட நபர்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,இதற்காக 2,794,966,169.90 ரூபா மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Beaches & Islands

விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், நீர்கொழும்பு, கடனீரேரி மற்றும் நீர்கொழும்பில் இருந்து பாணந்துறை வரையான 457 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன், இதனால்; பாதிக்கப்பட்டவர்;களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply