திருமணத்துக்கு தயாராகும் பெண்களே, திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என பயப்படுகின்றீர்களா? அப்படியானால், கீழ்வரும் அழகு குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள். திருமணத்தன்று தேவதையை போல் நீங்கள் ஜொலிக்கலாம்.

கண்ணின் அழகு மேம்பட வெள்ளரிபிஞ்சு வைத்து கண்ணை மூடி கொண்டு 15 நிமிடம் முகத்தை சாய்த்து ஓய்வெடுக்கலாம். கணினி, கைபேசி, தொலைகாட்சி போன்றவற்றை குறைத்து கொள்ளலாம். இது உங்கள் கண்களை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.
கண்ணின் கீழ் கரு வளையங்கள் போக வேண்டும் என்றால் வாழைப்பழத்தை அல்லது வாழையின் தோலை, பேஸ்ட் போல் செய்து தடவலாம்.
கற்றாழை போன்ற இயற்கை பொருட்களால் முகத்தை, கழுத்தை, கை, கால் பகுதிகளை நன்றாக 15-20 நிமிடம் வரை தேய்த்து தடவி, பின் கழுவி விடலாம். மிக அழகான அளவிலான பொலிவு இதனால் கிடைக்கும். எப்படிப்பட்டவர்களுக்கும் 5 வயது குறைந்த அழகு கொடுக்கும்.
பீட்ரூட்டை, உதடு பகுதிகளில் சிறிது தடவி இரண்டு உதடும் சேர்த்து….ம்ம் என்று செய்வது போல் 5-10 நிமிடம் செய்து வந்தால் உதடு அழகு கூடும்.
தக்காளி மற்றும் பாதாம் (ஊறவைத்து) சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகம் ஜொலிக்கும்.
கை, கால்களில் தேவை இல்லாத முடியை நீக்க, குப்பை மேனி இலை, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பூசினால், முடிகள் உதிர்ந்து, கைகளும், கால்களும் புது பொலிவு பெறும்.
பன்னீர் மிகவும் குளிர்ச்சியானது. சருமத்திற்கு புத்துணர்வு தருவது. இதனை முகத்தில் போட்டு 10-15 நிமிடம் கழித்து கழுவி விட, பொலிவு கூடும்.
சரும நன்மைக்கு இரவு நேர உணவும் முக்கியமானது. மாலையில் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சொல்லபோனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடன் உப்பு நிறைந்த உணவுகளை எப்போதுமே தவிர்க்க வேண்டும். தொடர்ந்து சில நாட்கள் உப்பு உணவை தவிர்த்தால் சருமத்தின் கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம் கட்டுப்படுவதை பார்ப்பீர்கள்.
கிரீம் வகைகளில் விட்டமின் ‘சி’ இருப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக கண்களை சுற்றியுள்ள கருமை போக விட்டமின் ‘சி’யும் தேவையான ஒன்று. இது கருமையான புள்ளிகளை நீக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது. அழகான பளபளப்பான சருமத்தை அளிகிறது.
கண் சோர்வு, கண் மந்தம் நீங்கி கண்கள் பொலிவு பெற கண்களுக்கு கீழ் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது கண் இரைப்பை வீக்கம் இல்லாமல் அழகாக வைத்திருக்கும். முகத்தில் கண்களின் அழகும் தனியாக தெரியும்.
🚩 பொறுப்புத் துறப்பு
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.