வடமேற்கு காங்கோவில் இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர்.

கின்ஷாஷா

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் 86 பேர் உயிரிழந்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள். இந்த படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதுமே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈக்வடேர் மாகாணத்தின் லுகோலேலா பிரதேசத்தில் உள்ள காங்கோ ஆற்றின் குறுக்கே 500 பயணிகளுடன் சென்ற ஒரு படகு தீப்பிடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர். 209 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். வடமேற்கு காங்கோவில் இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் படகுகள் கவிழ்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதுபோன்ற பயணங்களில், லைப் ஜாக்கெட்டுகள் அரிதானவை. அதிக சுமையுடன் பல படகுகள் இரவில் பயணிக்கின்றன. விபத்துகளின் போது மீட்பு முயற்சிகளை சிக்கலாக்குகின்றன என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *