மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் சிலர் கண்டி – பேராதனை , கன்னொருவ பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி – தெல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் அரச ஊழியர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.