
இன்று | சர்வ ஏகாதசி |
17 செப்டம்பர் 2025 புதன் | |
தேதி | 01 – புரட்டாசி – விசுவாவசு புதன் |
நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:30 – 05:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | மூலம் |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | கன்னி லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 00 |
சூரிய உதயம் | 06:03 கா / AM |
ஸ்ரார்த திதி | சூன்ய |
திதி | இன்று அதிகாலை 03:26 AM வரை தசமி பின்பு ஏகாதசி |
நட்சத்திரம் | இன்று காலை 09:56 AM வரை புனர்பூசம் பின்பு பூசம் |
சுபகாரியம் | கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன் | 17 செப்டம்பர் 2025 புதன்
மேஷ ராசி நேயர்களே
குடும்பத்தில் குதூகலம் நிறையும். மன இறுக்கங்கள் குறையும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்களே
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வராமல் நின்று போன பணம் கைக்கு திரும்ப வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுன ராசி நேயர்களே
முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்கள் உங்கள் இல்லம் நாடி வருவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கடக ராசி நேயர்களே
எப்போதும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. மனசோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்ம ராசி நேயர்களே
தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். ஆடம்பர செலவுகளை குறைக்க பார்க்கவும். விலகி சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி ராசி நேயர்களே
பக்தி எண்ணம் மேலோங்கும். திட்டமிட்ட காரியம் சீக்கிரத்தில் நடக்கும். பிரியமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே
குடும்பத்தில் நல்லது நடக்கும். பல நாள் திட்டங்கள் நிறைவேறும். புது நபர்களின் வருகை உற்சாகம் தரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே
குடும்பத்திற்கு பெரியளவில் நன்மைகள் கிடைக்கும். யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம். வழக்கில் நல்லதொரு தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு ராசி அன்பர்களே
வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பண தேவைகள் அதிகமாகவே இருக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புது தொழில் யோகம் அமையும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
கும்ப ராசி நேயர்களே
குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். நண்பர்கள் பாச மழை பொழிவர். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் – 15-09-2025 To 21-09-2025
மேஷ ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மீக காரியங்களில் ஈடுபடவும். புதிய முயற்சிகள் எதுவம் தற்சமயம் வேண்டாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். புதியவர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் நலம் சீராக இருக்கும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வெளியுலகில் உங்கள் மதிப்பு, கௌரவம் கூடும். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்
ரிஷப ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். மனம் யோக தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். குடும்பத்திலும் பொது இடங்களிலும் அனுசரித்து போவது நல்லது. முன்பு தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடர முடியும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்ப செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்
மிதுன ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவதால் பல நன்மைகள் கிடைக்கும். யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. திருமண காரியம் விரைவில் கைகூடும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவர். வாகன பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோக பணிகளை விரைந்து முடிக்கவும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்
கடக ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன் படி, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை இருக்கும். நீங்கள் எதிலும் தீவிரமாக யோசித்து நிதானமாக செயல்படக்கூடியவர். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். குடும்பத்தில் அமைதியான நிலை ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : அங்காள பரமேஸ்வரியை வழிபடவும்
சிம்ம ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். உணவு பழக்கங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க திட்டமிடலாம். நண்பர்களால் பண உதவி கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் செலவுகள் தற்சமயம் அதிகரித்து காணப்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். திருமண முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மையை தரும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் :தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்
கன்னி ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதில் பட்டதை தைரியமாக பேசவும். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். புது வீடு மாற்றம் ஏற்படும். நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். கணவன் மனைவிடையே இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வீண் செலவுகள் அதிகம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்
துலாம் ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேக ஆரோக்கியம் பலம் பெரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
விருச்சிக ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் நடந்தேறும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களும் உழைப்பிற்கு ஏற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இருக்கும். கொடுக்கல், வாங்கல் ஆதாயம் தரும். பிரியமானவர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட கூடும். புது வாகனம் வாங்குவது குறித்த யோசனை வரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிறிது சிரமம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்
தனுசு ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, பொருளாதார நிலையில் லேசான பின்னடைவு ஏற்படலாம், இருப்பினும் சமாளிக் கூடிய திறமை சாமர்த்தியம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகாரமான சூள்நிலை அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை உண்டாகும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். கடன் பிரச்சனையில் இருந்து ஓரளவு விடுபட முடியும். குடும்பத்தில் உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நிறைய நன்மைகளும் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்
மகர ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கவனமாக பழகவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். யாருக்கும் பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். உடல் நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். புது பொருள் வாங்க தாமதம் ஆகலாம். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வணங்கி வழிபடவும்
கும்ப ராசி அன்பர்களே
இந்த வார ராசிபலன்படி, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் நலம் பலம் பெரும். பண சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. புது நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். தான தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்
மீன ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உண்டாகும். கையில் எடுத்த காரியங்களை தங்கு தடையின்றி முடிக்க முடியும். அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகரியங்கள் எதற்கும் குறைவில்லை. குலதெய்வ வழிபடு சிறப்பை தரும். நட்பு வட்டாரம் விரிவடையும். வரவும் செலவும் சமமாக இருக்கும். அதிகளவில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பண வரவுகள் அதிக அலைச்சலுக்கு பிறகே வந்து சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் சுப விரயங்கள் மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : குலதெய்வத்தை வணங்கி வழிபடவும்
தமிழ் மாத ராசி பலன்கள் |
செப்டம்பர் மாத ராசி பலன்கள் (2025) விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி முதல் புரட்டாசி மாதம் 14ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-09-2025 முதல் 30-09-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். செப்டம்பர் மாத கிரக நிலை மாற்றம் 13-09-2025 – துலாம் – செவ்வாய் 15-09-2025 – சிம்ம – சுக்கிரன் 15-09- 2025 – கன்னி – புதன் 17-09-2025 – கன்னி – சூரியன் ராசி பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A. வினோத் குமார், Ph.d Astrology (அலைபேசி: 9003019831) |
செப்டம்பர் மாத ராசி பலன்கள் (2025)
மேஷ ராசி அன்பர்களே
இந்த மாதம் மிகவும் சிறப்பான முறையில் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்வது அவசியம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது மன அழுத்தம் இருக்கும் ஆகையால் தியானம் செய்வதால் மட்டும் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். பல நாட்களாக இருந்த குடும்ப சிக்கல்கள் படிப்படியாக குறையும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். கோபத்தைக் குறைத்து நிதானத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாலினத்தவரிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும். தெய்வ அனுகூலம் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். தடைபட்ட பல விஷயங்கள் எளிதில் முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாக மட்டுமே இருக்கும். எந்த ஒரு வாக்குறுதியையும் யாருக்கும் தர வேண்டாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு மனவருத்தங்கள் கூட மறையும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் நிச்சயம் உண்டு. நெருங்கிய சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிரிந்து சென்ற முக்கிய நபர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 26,27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். பொருளாதார சிக்கல்கள் ஓரளவு குறையும். யாருடனும் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு சில தொந்தரவுகள் இருக்கும். குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். சுற்று வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். மற்றவர்களிடம் நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். விலகிச் சென்ற உறவுகள் தேடி வரும். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பர். எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் சர்வ சாதாரணமாக பேசி முடிக்க முடியும். நெருங்கிய உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கை கூடும். புதுப் பொருள் சேர்க்கை உண்டாகும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். நண்பர்கள் விஷயத்தில் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். எதிரிகளால் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். அடுத்தவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். உங்களை சுற்றி இருப்பவர்கள் சகஜமாக பேசி பழகுவர். சுப காரியங்கள் கைகூடி வரும். உறவினர்களிடம் இருந்த வீண் மனஸ்தாபங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் மனதில் தோன்றும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து பிரச்சனையில் வில்லங்கம் இருக்கும். உடல் நலத்தில் அக்கறைகொள்ளவும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். .
சந்திராஷ்டமம் : 1,2,3,4 & 30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
மிதுன ராசி அன்பர்களே
இந்த மாதம் நிறைய சவால்கள் சந்திக்க வேண்டிவரும். நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். மனதில் போட்டு வைத்த திட்டத்தை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்த முடியும். பொருளாதார நிலையில் நல்ல மேன்மை உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உற்சாகமாக செயலாற்றி எதிலும் வெற்றி பெற முடியும்.அடிக்கடி பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. இது வரை சந்தித்து வந்த அலைச்சல்கள் குறையும். தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் மிகவும் அவசியம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிரிகள் பலம் குறைந்து காணப்படுவர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அதிகளவில் செலவினங்கள் இருப்பதால் சிக்கனம் தேவை. உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்க போகிறது என்பது தான் உண்மை. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏதேனும் உடல் பிரச்சனை என்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கடன் தொல்லைகள் ஒரு புறம் இருந்தாலும் அதை எப்படியும் சமாளிக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிடையே அந்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் கைகூடும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி சேமிக்க முடியும். குடும்ப விஷயங்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி அன்பர்களே
இந்த மாதம் மனதில் நினைத்த காரியம் நடக்க ஆரம்பிக்கும். உங்கள் செயல் திறன் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பொருளாதார பிரச்னையை சமாளிக்க முடியும். குடும்பத்தினர் ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர். முன் கோபத்தை கட்டுபடுத்தவும். எப்போதும் பேச்சில் கவனம் தேவை. நெடுதூர பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிக்க வழி கிடைக்கும். குடும்பத்தில் செலவினங்கள் அதிரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நெருங்கிய உறவுகளால் மனஸ்தாபங்களும், விரயமும் ஏற்படும். எதிரிகளால் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்கும் எந்த உத்திரவாதமும் தர வேண்டாம். பிரியமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. எதிர்ப்புகள் தானாக அடங்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அடுத்தவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தைரியமாக செய்ய முடியும். உடல் நலம் சீராகும். வேண்டியவர்கள் ஒரு சிலரால் சில கசப்பான விஷயங்கள் நடைபெறலாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் போகவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் பெருகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். உத்யோகத்தில் புது திட்டங்களை செயல்படுத்த முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி அன்பர்களே
இந்த மாதம் நல்லது கெட்டதும் கலந்தே நடக்கும். நீங்கள் முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். உங்களுக்கு எதிராக இருந்த விஷயங்கள் எல்லாம் சாதகமாக மாறும். பொருளாதார நிலையில் ஏற்ற, இரக்க நிலை இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின், அறிவுரையும், ஆசியும் கிடைக்கும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அறிவுரையும் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் கட்டுவதை தவிர்த்தல் நல்லது. குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும். கடன் தொந்தரவு இருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கைத் தரம் உயரும். வழக்கு விஷயங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து போகவும். எதிலும் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். எதிர்கால கனவுகள் நிறையவே இருக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் சவாலாக நிறைந்து இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன லாபமும் உண்டு. எங்கும், எதிலும் பொறுமை அவசியம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். கடந்த சில தினங்களாக இருந்து வந்த மன ரீதியான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும். ஒரு சில அவசர முடிவுகளால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடலாம். குடும்பத்தினருடனான ஒருங்கிணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க போதுமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை ஏற்பட்டு நீங்கும். மனதில் சில நேரங்களில் பயமும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும். உற்றார், உறவுகளுடன் சிறு மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். மனதை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வதால் குழப்பங்களை தவிர்க்கலாம். எதிரிகள் விலகி செல்வர். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தின் மேன்மை உயரும். குடியிருக்கும் வீட்டை புதிப்பிக்கவோ, அல்ல வீடு மாற்றி செல்லவோ வேண்டி வரும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
துலாம் ராசி அன்பர்களே
இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மன பயம் நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொது நல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு இருக்கும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். ஒரு சில நேரங்களில் இனம் புரியாத கவலை, கோபம் வந்து நீங்கும். எதிர்பாலினத்தவரால் சில பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களால் ஆதாயம் உண்டு. காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். எதிரிகளால் சிறு,சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உடல் உபாதைகள் ஏதேனும் வந்தாலும் அதை உடனே சரி செய்ய முடியும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மைகள் கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குல தெய்வ வழிபாட்டை சிறப்பாக செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் மன நிம்மதி குறையும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பெண்களால் ஒரு சில சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிறிது சிரமம் ஏற்படும். பணத்தை கையாளும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். அக்கம் பக்கம் வீட்டார் உதவிக்கரமாக இருப்பர். எதிர்பார்த்த விஷயங்கள் தானாக நடக்கும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். சமூக வாழ்க்கையில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். யாருக்காகவும் உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகள் பலம் அதிகரித்தாலும், அதை எதிர்த்து நின்று சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் வெற்றி அடையும். நீங்கள் செய்ய காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்வது நல்லது. நண்பர்களால் பெரிய நன்மைகள் ஏற்படும். வீட்டில் ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கணவன் மனைவிக்குள் மனகசப்புகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் அதிகம் கிடைக்கும். குடும்ப நபர்களை அனுசரித்து போவது நல்லது. முக்கிய காரியங்களை நீங்களே தனியாளாக நின்று செய்து முடிக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்துவதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படவும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பொருளாதார நிலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுவது நல்லது. ஆதாயம் உண்டு. புது நட்பு வட்டாரம் உருவாகும். எதிரிகளால் சில பிரச்சனை வந்து நீங்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். திருமண காரியங்கள் கைகூடும். தடைபட்ட காரியம் தாமதமாக நடக்கும். அடுத்தவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தனியாளாக நின்று முடிக்க முடியும். யாருடைய ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். பிரியமானவர்களால் கருத்து வேறுபாடு வந்தாலும் அதை பெரிதுபடுத்தவேண்டாம். நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வாழ்க்கைதுணையின் ஆலோசனை கைகொடுக்கும். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
மகர ராசி அன்பர்களே
இந்த மாதம் மறைமுக எதிர்ப்பு இருந்தாலும், அனைத்தையும் சமாளிக்க முடியும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதை இருக்கும். எடுக்க போகும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. எந்த ஒரு சூழ்நிலையிலும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விலகியே இருக்கவும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் குறையும். முன் பின் அறிமுகம் இல்லாத புது நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை முடிவெடுத்து செயல்படுவது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகளால் பிரச்சினை வந்தாலும், எதிர்கொள்ள முடியும். பணம் தொடர்பான விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்த சஞ்சலம் அகலும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. அடுத்தவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் அவசியம் தேவை. உங்களிடம் இருந்து விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேருவர். அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கத்தை கை விடவும். புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். வேண்டிய இடத்திலுருந்து பண உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆன்மிக பணகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி தோன்றும். உடல் நிலை சீராக இருந்து வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உத்யோகத்தில் பல இடைறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
கும்ப ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் தேவையான பொருட்களை வாங்க முடியும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். உஷ்ணம் சமபந்தமான தொந்தரவு இருக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் தாமதப்படும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவர். நீங்கள் சந்தோஷம் படக்கூடிய செய்தி ஒன்று வரும். பிரியமானவர்கள் உதவிகரமாக இருப்பர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிரிகள் அடிபணிந்து போவர். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெற்றோர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். ஒரு சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். பயணங்களால் வீண் அலைச்சல்களும் பண விரயமும் உண்டாகும். தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் கைகூடும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். பெரியோர்களின் ஆசியும், தெய்வ அனுகூலமும் கிடைக்கும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. சுற்றி இருப்பவர்கள் உங்களை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். பேச்சில் நிதானம் அவசியம். மனதில் எதிர்மறை சிந்தனையையும் தவிர்த்து எதார்த்தமாக சிந்திப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பிரியமானவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்களால் மனகசப்புகள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். எதிரிகள் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். தேக ஆரோக்கியம் பலம் பெரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வர வேண்டிய பணம் சிறிய தாமதித்து பின் கைக்கு வரும்.தவிர்க்க முடியாத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். குடும்பத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்