வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் ‘பிட்காயின்’ என்ற ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் டிரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது.

அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக அதிபர் டிரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை துாண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *