எனக்கு பொதுவாக Artificial Inteligent (AI) உருவாக்கும் படங்கள் மீது மிகப்பெரிய ஒவ்வாமை இருக்கிறது. இதை தாண்டி, 22 வருட கணினி பயன்பாடுகள் கையாளுமை மற்றும் கணினி மொழி என்று சொல்லக்கூடிய Fortron, C and C++ மற்றும் java போன்றவற்றை படித்து ஓரளவிற்கு, Simulations progtram எழுதக்கூடிய நிலையில் இருந்தமையால் எனக்கு AI தொழில் நுட்பம் குறித்தும், அதில் உள்ள ஆபத்து குறித்தும் நன்றாக அறிவேன்.

அதனால் பெரிதாக, தமிழர் வரலாற்று பதிவுகளில் AI தொழில்நுட்ப தலையீடுகளை ஒருபோதும் நான் விரும்புவதில்லை.
இதற்கு இன்னொரு காரணம், கீழடியில் எடுக்கப்பட்ட தடயங்களை வைத்து மனித உருவத்தினை உருவாக்கும் முயற்சியில் வெளியிடப்பட்ட சில உருவங்கள், எவ்வளவு பெரிய மோசடி என்று அறிய முடிகிறது.
இந்த நிலையில் இன்று முகநூலில் தமிழர் வரலாற்று பெருந்தலைவர் மேதகுவின் படத்தோடு தன்னுடைய படத்தையும் இணைத்து AI மூலம் உருவாக்கிய படங்களை இணையதளம் முழுக்க காண முடிகிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? AI தொழில் நுட்பத்திற்கு ஒரு படத்தை நீங்கள் பதிவேற்றம் செய்தவுடன், அந்த படத்தை AI தொழில் நுட்பம் எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம் என்ற நிலை குறித்து உங்களுக்கு தெரியுமா ? கழிவறை சுத்தம் செய்யும் விளம்பரத்திற்கு கூட அந்த படத்தை AI மூலம் பெற்று எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உங்கள் படம் குறித்து, அதை நாளை AI எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவது குறித்து உங்களுக்கே கவலை இல்லை என்ற போது, எனக்கு அதில் சிக்கலில்லை. ஆனால் மேதகுவின் படங்கள் என்ன ஆவது ?
நீங்கள் தலைவரோடு நிற்பது போன்ற படங்களை நீங்கள் வெளியிடுவது தலைவர் மீது உங்களின் அன்பை வெளிப்படுத்துவது போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் AI இக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் வரலாறு எப்படி எழுதப்பட போகிறது என்பதில் மிகுதியான கவனம் தேவை.
மேதகு நமது இனத்தின் பெரும் அடையாளம், அதை கேளிக்கையாக, காட்சி பொருளாக, இணையம் முழுமைக்கும் விருப்பம் என்ற பெயரில் பயன்படுத்துவதை சகிக்க முடியவில்லை.
நமது அடையாளங்கள் மீது, அவை கொண்டிருக்கும் புனிதத்தோடு விட்டுவைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அப்போதுதான் அந்த அடையாளங்கள் அதன் வரலாறோடு நிலைபெறும்.
இதை விடுத்து நமது மகிழ்விற்காக, அல்லது அன்பை வெளிப்படுத்தும் விதமாக எதையாவது செய்யவேண்டும் என நினைக்காதீர்.
நான் சொல்வதில் உங்களுக்கு ஏற்போ, மறுப்போ இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை.
மேதகு நமது இனத்தின் பெருங்கடவுள், பேரடையாளம், புனிதமிக்க வரலாறு. அந்த மாபெரும் புனிதத்தின் கையசைவில் மாவீரர்களாகி களமாடிய போராளிகளை நாம் தெய்வமாக வணங்குகிறோம். அப்படி எனில், நமது தெய்வங்கள் வணங்கிய பெருந்தெய்வம் எங்கள் தலைவர் !
தோளில் கைபோட்டு, பட்டுவேட்டி சட்டை தோற்றம் என இப்படியெல்லாம் இணையத்தில் உளவவிடுவது எத்தகைய பாவம் ?
விடுதலைப் பெருங்கனவில் கழுத்தில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு சயனைடு குப்பிகளை அணிந்து களமாடிய தலைவரின் வரலாற்றை, பட்டுவேட்டி பட்டு சட்டையோடு முறுக்கு தங்க சங்கிலி போட்டு படம் பதிவிடுவது எவ்வளவு பெரிய பாவம் ?
தயவு செய்து அத்தகைய பாவத்தை யாரும் செய்யாதீர்கள் !
முனைவர் செந்தில்நாதன்,
வீரத்தமிழர் முன்னணி.
