
கேகாலை – மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மாவனெல்லை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள குடும்பஸ்தரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போயுள்ள குடும்பஸ்தரின் விபரங்கள் பின்வருமாறு ;
- பெயர் – கொரவக்க விதானலாகே உபாலி திலகரத்ன
- வயது – 49
- முகவரி – பாட்டகம, கல்அதர, கேகாலை
இந்த புகைப்படத்தில் உள்ள குடும்பஸ்தர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591418 அல்லது 035 – 2246222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.