
மாத்தறை, அக்குரெஸ்ஸ பகுதியில் மாத்தறை – காலி வீதியில் உள்ள கால்வாயில் இருந்து இன்று திங்கட்கிழமை (22.09.2025) காலை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அக்குரெஸ்ஸ,பரதுவ திப்பலைவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில்இருந்து குடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.