குருதிச் சுவடுகள்

2ம் லெப்டினன்ட் ரூபி
தம்பையா செல்வராணி
நாவற்காடு, கரம்பைக்குறிச்சி, வரணி,
கொடிகாமம், யாழ்ப்பாணம்
24.08.1964 – 23.09.1991
23.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: வித்துடல்
அடர்ந்த காடு அருகே வயல் வெளி, இடையே இரண்டாம் உலக மகாயுத்தத்தை நினைவு கூறும் குழிகள் (குளங்கள்), சுதந்திரமாக உலாவரும் மந்தை , மாட்டுக் கூட்டங்கள். இயற்கையை இரசித்து இனியகுரல் எழுப்பும் இனிய பட்சிக் கூட்டங்கள், மீனின் வரவை எதிர் பார்த்து தவம் செய்யும் நாரையினம் இவ்வாறு இயற்கை அழகை தன்னகத்தேகொண்ட அந்த சிறிய கிராமத்திலே ஓர் அழகான குடும்பம். அங்கே தோன்றிய சந்தோசம் ஏனோ நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. மழைமேகம் போல் மறைந்துவிட்டது. தம்பையா, யோகம்மா தம்பதியருக்கு தவப்புதல்வர்கள் ஒன்பது பேர். பெண்களுள் முத்தவளாகப் பிறந்தாள் செல்வராணி எனும் மழலை. தனது மழலை மொழியாலும், குழந்தை விளையாட்டாலும் குடும்பத்தையே மகிழவைத்தாள். செல்வராணியைச் செல்லமாக செல்வி என்றே அழைத்தனர் அவளின் பெற்றோர். சேற்றின் செந்தாமரை போல் விளங்கினாள் அவள். ஆம் அவள் தான் ரூபி. 2 ஆம் லெப்டினன்ட் ரூபியாக தமிழீழ மண்ணுக்கு உரமானவள்.
முல்லைத்தீவினில் முத்தையன் கட்டு எனும் கிராமத்திலே பிறந்து தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்று தனது இளமை உணர்வுகளை எல்லாம் சுமந்து கன்னியாக உலாவரும் வேளையிலே பெரும்புயல் ஒன்று அவள் வாழ்க்கையிலே வீசியது. அந்நியர் ஆட்சியிலே அதுவும் பிறநாட்டவன் வந்து எமது மண்ணில் அட்டூழியம் புரியும் வேளையிலே, அவளின் தம்பி எமது இயக்கத்தின் பகுதி நேர உறுப்பினர் ஆனான். அதனை அறிந்து எமது நாட்டின் தேசத் துரோகிகள் அவன் உயிருக்கு உலை வைக்கின்றனர். குடும்பத்தின் விளக்காக குடும்பத்தையே காக்கவேண்டியவன் துரோகிகளின் துரோகத்தனத்திற்கு தன் உயிரைக் கொடுக்கிறான்.
அண்ணனின் இந்நிலையைக் கண்ட தங்கை கொதித்தெழுகிறாள் புயலாக மாறுகிறாள் புலியாக. புலியானவள் தான் ரூபியின் தங்கை, அதாவது நிவேத்திரா. தங்கையானவள் தமயனைக் கொன்றவனை அழிக்கப்புறப்பட்ட வேளையிலே ரூபியின் தங்கை அதாவது நிவேத்திராவின் அக்கா ராணி புறப்படுகின்றாள். புலியுடன் இணைய. ஆனால் மகளிர் படையினரோ தங்கை இருக்கும் போது நீர் ஏன் வருகிறீர் என மறுப்புத் தெரிவிக்கின்றனர். திரும்பவும் வீடு சென்று தங்கைக்கு ஏதாவது நடந்தால் வாரும் என்றும் கூறுகின்றனர். மனமின்றி வீட்டிற்குச் சென்றவள், தம்பியை இழந்து தங்கையை இயக்கத்திற்கு அனுப்பிவிட்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியாது விரக்தி அடைந்த மனதுடன் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்கிறாள். பெற்றோரின் நிலையோ கவலைக்கிடம். காரணம் மகனை பறிகொடுத்தனர். மகளும் இயக்கத்திற்குச் சென்றுவிட்டாள். மற்ற மகளும் இவ்வாறு செய்தாள். பெற்றவர்கள் நிலை என்னாவது? எனினும் மனவுறுதியுடன் முல்லைத்தீவில் இருந்து வரணி நோக்கி வருகின்றனர். பிள்ளைகளைப் பிரிந்தது ஓர்புறமும், பொருளாதாரக் கஸ்டம் மறுபுறமும் வாட்ட வேதனையில் வாழ்கின்றனர் அப்பெற்றோர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையிலே தான் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தன்னை முழுநேர உறுப்பினராக்க விரும்பி முகாம் நோக்கி வருகின்றாள். அவளை அணுகி விசாரித்த மகளிர் படைப்பிரிவினர் திரும்பி வீட்டிற்குப் போகும்படி அனுப்புகின்றனர். தங்கை இருக்கும் போது நீங்கள் ஏன் வரவேண்டும். தங் கைக்கு ஏதாவது நடந்தால் வாருங்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் அவள் வீட்டிற்குச் செல்ல மறுக்கின்றாள். அந்த மகளிர் படைப் பிரிவினரிடம் “அக்கா நான் என்ன திரும்பிப் போகவோ வந்தேன். ஓர் குடும்பத்தில் இருவர் இருந்தால் என்ன? தமிழீழத்தில் எத்தனை பேர் ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரங்கள் இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இருக்கக் கூடாது?” என்று கேட்கின்றாள். “அப்படி நான் திரும்பிப் போவ தாயின் என் உயிரற்ற உடல் தான் செல்லும்” என்றும் கூறு கிறாள். மகளிர் படையினர் அவளின் தங்கை செய்ததை நினைத்து உடனே இயக்கத்தில் இணைக்கின்றனர்அவளின் உறுதியான வார்த்தையே அவளை இயக்கத்தில் இணைக்கிறது. நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம்
இதனை அறிந்த அவளின் தம்பிக்கு அக்காமார் இவ்வாறு செல்லும் போது நான் ஓர் இளைஞன் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஓர் புதிய கேள்வி உருவாகிறது. உடனே அவனும் தன்னை இணைத்துக் கொள்கிறான் இயக்கமதில். அவன் தான் கட்டைக்காட்டினிலே கயவருடன் போரிட்டு விட்டு தமிழ் அன்னை மடி மீது துயில் கொள்ளும் வீரவேங்கை சதீஸ்.
இவ்வாறு இணைந்த செல்வராணி தன்னை ரூபி என மாற்றிக் கொள்கிறாள். அவள் அமைதியுடன் மிகுந்த கவனத்துடன் சகலதையும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் படைத்தவள். தன்னை மற்றவர் பிழையாக எண்ணக்கூடாது எனுக் கொள்கை உடையவள். பயிற்சி நேரம் இவளுக்கு கால் உளுக் கிவிட்டது. ஒட முடியாது. எனினும் ஒருவாறு இழுத்தி முத்து ஓடிக்கொண்டிருக்கும் போது பயிற்சியாசிரியர் பார்த்து விட்டார். உடனே ஆசிரியர் திலகா (கப்டன் திலகா) மறிக்கிறார்.. அதற்கு ரூபி நான் நின்றால் மற்றப் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்https://tamileelamarchive.com/
எனத் தொடர்ந்து ஓட முயற்சிக்கிறாள். சொன்னால் நிற்பதுதானே என மாஸ்ரர் கூற உடனே பணிந்து நிற்கிறாள். மண்ணை நோக்கியபடி குனிந்து செல்லும் அப்பெண் போராளி யாரென்றால் நிச்சயமாக ரூபியாகத்தான் இருக்க வேண்டும் எனக்கூறி விடுவார்கள். எதனையும் தட்டிக் கேட்கும் சுபாவம் படைத்தவள். அதாவது சரியானது இதுதான் என்றாள் யாரென்று பார்க்காது நீதிக்கு தலை வணங்கும் நற்பண்புண்டு.
அவள் பல களம் கண்டவள். பலாலி, கோட்டை, சிலாவத் துறை, காரைநகர், வவுனியா, கட்டைக்காடு, மணலாறு என்று எல்லா இடமும் அவளின் பங்க ளிப்பு உண்டு. எந்த இடத்திலும் சிறு பங்களிப்பாவது இருக்க வேண்டும் என்று துடியாய் துடித்து தன்னையும் இணைத்துக் கொள்வாள். அவள் செல்லும் களங்களிலெல்லாம் கூறுவாள், இவன்களாலே தானே என்ர தம்பியும், தங்கையும் இறந்தவர்கள் என்று ஆவேச மாகவே நின்று அடிபடுவாள். ஓர் முறை குழுத் தலைவியாக ஓர் முகாமில் இருக்கும் போது நான் “அக்கா சாப்பிட வாருங்கள்” என்றேன். “நீங்கள் போங்கள். நான் பிள்ளைகள் வந்த வுடன் வருகின்றேன்” என்று கூறினாள். அப்போது அவளின் குரூப் பிள்ளைகள் குளிக்கச் சென்றிருந்தனர். இதிலிருந்து அவள் தனது குரூப்பில் எவ்வளவு கவனமானவள் என உணர்ந்து கொண்டேன். இன்னுமோர் முறை பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருக்கும் போது அவரின் பிள்ளைகள் “வெட்ட வேண்டாம் அக்கா. நாங்கள் வெட்டுகிறோம்” என்றார்கள். உடனேயே அவள் “ஏன் நான் வெட்டக் கூடாதா” எனக் கேட்டு விட்டு தொடர்ந்து வெட்டினாள். தான் வெட்டினாள் தானாம் பிள்ளைகள் சோர்வடையாமல் வெட் டுவார்களாம். தற்பெருமை எதுவுமின்றி அவள் காணப்பட்டாள்.https://tamileelamarchive.com/
இன்னுமொன்று நினைவிற்கு வருகின்றது. என்னவென்றால் நானும் என்னுடன் இணைந்த சில போராளிகளும் சேர்ந்து, “அக்கா நீங்கள் பயிற்சி ஆசிரியர் நிவேத்திரா அக்காவின் அக்காவா” என்று கேட்டோம். அப்போது இவ நிவேத்திரா அக்காவின், அக்கா என்பது எமக்குத் தெரியாது சில சந்தேகத்தின் பேரிலேயே கேட்டோம். அதற்கு “நிவேத்திராவா? யார் அவ? மன்னிக்க வேணும். நிவேத்திரா அக்காவா, அப்படி ஓர் அக்கா இருக்கிறா என்று தெரியும். ஆனால் அவ என்னுடைய தங்கை அல்ல” என மறுத்துவிட்டார். நாம் பல முறை வற்புறுத்தியும் பதிலளிக்கவில்லை . பின்பு நாம் வேறுவழியாக அறிந்து அவவிடம் முழுவிபரமும் கூறி “நீங்கள் உண்மையில் நிவேத்திரா அக்காவின் அக்காதான். ஏன் எங்களுக்குச் சுத்துகிறீர்கள்”? எனக் கேட்டதற்கு புன்சிரிப்புடன் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டார்.
இவ்வாறு நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் வேளையில் தான் ஆனையிறவு மீதான தாக்குதலுக்கு பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பயிற்சி முடிந்து ஆனையிறவில் நிற்கும் அவளுக்கு கட்டைக்காட்டிற்கு வரும்படி அழைப்பு வருகிறது. கட்டைக்காட்டினிலே காவல் கடமையில் நிற்கும் போது அவளது தம்பி (அதாவது வீர வேங்கை சதீஸ்) அவளைக் காணுகிறான். பொறுப்பாளரின் அனுமதி பெற்று இருவரும் கதைக்கின்றனர். தேசத்தின் எல்லையில் பாசத்தின் பிணைப்புகள் அங்கே தெரிகிறது. ஒருவருக்கொருவர் அறிவுரை, அதிலே “தம்பி நீ நன்றாக அடி பட வேண்டும். பின்னுக்கு வரக் கூடாது. அதற்காக கவலையீனமாக காயப்படக்கூடாது” என்று அந்த அன்பு அக்கா கூறுகிறாள். ஏனெனில் அவள் ஓர் இயக்க உறுப்பினரையும் வீணாக இழக்கத் தயாரில்லை . “அக்கா நீங்களும் கவனம்” எனக்கூறி விடைபெறுகின்றனர். அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பும், அறிவுரையும் என்று இருவருமே எண்ணவில்லை . ஆனால் விதியானது கடுகளவும் பிசகாது தன் தொழிலைச் செய்கிறது.
சண்டை தொடங்கிவிட்டது. கட்டைக்காட்டில் தொடர்ந்து மோதல். பல போராளிகள் மண்ணின் மைந்தர்களாக மாறித் தமிழ் அன்னையின் மடிமீது ஆனந்தமாக அமைதியாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சண்டை ஒய்வுக்கு வரும் வேளையில் குழு பிரிக்கப்பட்டு திரும்பவும் போர் முனைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் போது, “ரூபி நீ போகவேண்டாம்” எனக்குழுத் தலைவி கூறுகின்றார். ஏன் என்பது போல் இருந்தது அவளின் பார்வை. பிரித்த குரூப்பை அனுப்பிவிட்டு அவளிடம் வந்த பொறுப்பாளர், “உமக்கு அண்ணை தம்பி யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கிறார். கேட்டதும் “ஏன்? என் தம்பிக்கு என்ன நடந்தது” என்றாள். அவளுக்கு ஒருவாறு சமாதானம் சொல்லி வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வரும்போது அந்தச் செய்தி அறிவிக்கப்படுகிறது “தம்பியானவன் . மண்ணுக்கு உரமாகி விட்டான்.” உடனே அக்கா உறுதி பூணுகிறாள். தம்பியைக் கொன்றவன் – தலை கொய்வது திண்ணமென்று.
வீட்டிற்கு வந்து வீட்டில் நடந்த கிரிகைகளை பார்த்து விட்டு இதெல்லாம் என்ன செய்கிறீர்கள் என்றும், அவன் சாகவில்லை . தமிழீழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறான கடமை எல்லாம் தேவையில்லை அவனைக் கொன்றவனை கொல்வதே மேல் எனக் கூறுகிறாள். தம்பியைக் கொன்றவனை அவனின் நாற்பத்தைந்துக்கு இடையில் கொன்றுவிட்டு நானும் தம்பியுடன் இணைவேன் என்றாள். அதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருக்கும். வேளையிலேதான்,
மின்னல் தாக்குதலென மணலாறு மாவட்டத்தில் ஆரம்பமாகியது. விடுமுறையில் நின்றாள் ரூபி. அப்போது பெற்றோர் அவளை மறிக்கின்றனர். “என்னை மறிக்க வேண்டாம். தம்பியின் நாற்பத்தைந்திற்கு என் பொடிதான் வரும்” என்கிறாள். அண்ணனுடன் முகாமுக்குச் சென்ற ரூபி ஏதோ ஒரு விதமாக மணலாற்றுக்கு சென்றுவிட்டாள். அங்கே சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம் அவள் கூறியது போலவே தம்பியின் நாற்பத்தைந்திற்கு அவளின் உயிரற்ற உடலைக் கொண்டு தங்கை சென்றாள். ஆம் அவள் மரணத்திலும் வென்றுவிட்டாள். சொன்னதையே செய்தாள். செய்வதையே சொன்னாள். அவளின் சொல்லுக்கும் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .
2ம் லெப்டினன்ட் ரூபி, பல சாதனைகள் படைத்துவிட்டு பாசத்தையும் காட்டிவிட்டு தம்பியுடன் இணைந்து கொள்ள, ஏன் மற்றத் தம்பி தங்கைகளுடனும் இணைந்து கொள்ள தாய் நாட்டை நசுக்க வந்த கொடிய படையை தவிடுபொடியாக்கிவிட்டு வான் நோக்கிச் சென்றுவிட்டாள். ஆம் அவள் மண்ணிற்காக மடிந்துவிட்டாள். ஆனால், அவள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வோம். மலரும் தமிழீழத்தில் அவள் புது மலராக மலர்வாள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”