தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24.09.2025) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலை மாவட்டம் தழுவிய ரீதியில் 26.09.2025 ந் திகதியன்று நடாத்துவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது இந்திய அமைதி காக்கும் படையினரால் இலங்கையில் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் முன்றலில் உண்ணா விரதம் இருந்து தனது உயிரை தமிழினத்துக்காக தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக முன்னெடுக்க இக் கலந்துரையாடலானது இதற்காக 26.09.2025 அன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறும் இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழு சார்பாக அழைக்கிறோம் என்றார்.