லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து அகவணக்கத்துடன் உணர்வு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
















