12 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியக் கிரகப் போராட்டம்.

முத்து நகர்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 12வது நாளாக சத்யாக்கிரக போராட்டம் இன்றும் (28.09.2025) திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர்கிறது.

கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது பத்து நாட்களுக்குல் தீர்வை வழங்குவதாக கூறி இன்னும் பிரதமர் அவர்களின் காலக்கெடு மீதி 06 நாட்களே உள்ளன, திருகோணமலை வளங்களை சூரையாடுவதை நிறுத்து போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் சத்யாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) கருத்து தெரிவித்த விவசாயிகள் கடந்த 53 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக செய்து வந்த எங்கள் விவசாய பூமியை எங்களுக்கு வழங்குங்கள்.

இந்திய கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்ட விளை நிலங்களை மீளக் கொடுங்கள் எனவும் பிரதமர் 10 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில் இன்னும் ஆறு நாட்களே மீதமுள்ளன நல்லதொரு தீர்வை பிரதமர் எமக்கு வழங்குவார் எர எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *