யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை.
மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் முறையாக விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாக ஏற்றார்.

இனி எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நீங்கள் இங்கேயே நின்று காடு சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுமாறு கூறினார்.எதற்க்கும் நாங்கள் தலைவரிடம் சென்று மேலதிக தகவல்களை உங்களுக்குச் சொல்வதாகவும் கூறி புறப்பட்டார்.அவர் சென்று நான்கு நாட்களின் பின் யாழ்மாவட்டத் தாக்குதலனியையும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியையும் உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது அதற்கமைவாக அவ் அணிகள் புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.அங்கு அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயிற்சிக்காக அனுப்ப்பட்டது.
அங்கே மிகக் கடுமையான வேகமான பயிற்சிகள் தொடர்ந்தன . 28.09.1993.அன்று இராணுவம் முன்னேறுவதாகவும் அதற்காக அணிகள் புறப்படுமாறு பணிக்கப்பட்டது. அதற்கமைவாக புறப்பட்ட அணிகள் பளையில் இறங்கினதும் அங்கு நின்ற போராளிகள் வந்த போராளிகளுக்கு களநிலவரங்களை விளங்கப்படுத்தியதும்.வந்த போராளிகளுக்கு அப்போது தான் விளங்கியது.இது ஒரு பாரிய நகர்வென்று.ஆகவே அப் பாரிய நடவடிக்கைக்கு எதிரான மறிப்புத்தாக்குதலை அங்கு நின்ற அணிகளுடன் இவ் அணிகள் தொடுத்தனர்.மாலையாகியதும் எதிரி நகர்வை நிறுத்தினான்.
அணிகள் தற்காலிக அரணமைத்துக் கொண்டிருக்க தளபதி பால்ராஜ் அவர்கள் கதைப்பதற்காக அணிகளை பின்னே வருமாறும் அதற்கமைவாக வேவு அணிகள் அவ்விடங்களுக்கு வந்தது.அணிகள் பின்னே வந்து நின்றன தளபதி பால்ராஜ் அவர்கள் 29.09.1993 அன்று அதிகாலையில் வந்து தாக்குதல் பற்றி கதைத்து விட்டு மன்னார் மாவட்ட தாக்குதலனியுடன் நின்று அவர்களுக்கு உதவுமாறும் கூறிவிட்டுச் சென்றார்.அவரின் திட்டப்படி இராணுவத்தின் நகர்வு கிளாளியை நோக்கி இருப்பதாகவும. முன்னேறும் படையினரை முன்பக்கமாக தாக்கும் வேளையில் சிலவேளை பக்கபாட்டாக நகர்ந்தால் அதற்கேற்ற வகையில் உங்களுடைய தாக்குதல்கள் நீங்கள்எடுத்துக் கொண்டிருந்த பயிற்சிகளுக்கு ஏற்ற மாதிரி மிக வேகமானதாக இருக்க வேண்டுமெனக்கூறினார்.
அதற்கமைவாக அனைத்து அணிகளும் தத்தமக்குரிய நிலைகளில் இருந்தன.இதனை சற்றும் எதிர்பார்க்காமல் முதல் நாள் மாதிரி இன்றும் தாங்கள்( 29.09.1993.) பெரிய எதிர்ப்பில்லாமல் இடங்களைப் பிடிக்கலாம் என்ற கனவுடன் பாரிய எறிகணைத் தாக்குதல் நடாத்தியவாறு வந்த படையினர் மீது பாரிய தாக்குதலை அதுவும் மிகக் கிட்டிய தூரத்தில் நடாத்தினர்.அத்தோடு கடும் பயிற்சியிலிருந்த போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஒட்டமெடுத்த படையினர் மீது கலைத்து கலைத்து தாக்குதல் நடாத்தினர்.
படையினர் அவர்களது புல்லட் புறூவ் ஜக்கற்றை கழற்றி எறிந்து ஓடியவர்களும் சப்பாத்துக்களை ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓடியவர்களுமாக ஓட்டமெடுத்தனர்.இச் சமரில் ஒரு ராங்கியை ராங்கி எதிர்ப்புப் பிரிவினர் தாக்கி செயழிழக்கச் செய்தனர்.அவ் ராங்கியைக் கூட விட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர்.இதை வைத்தே எப்படி அடி என்று தெரியும்.இச் சண்டையில் விடுதலைப்புலிகளிடம் கனரக ஆயுத பலமோ மோட்டார் பலமோ இருக்கவில்லை அவர்களிடம் இருந்ததோ ஒரேயொரு பலம் அது தான் மனோபலம்.இச் சமர் என்பது யாழ் மாவட்ட அணிகள், மன்னார் மாவட்ட அணிகள், வன்னி மாவட்ட அணிகள், மணலாறு மாவட்ட அணிகள் மகளீர் அணிகள், கடற்புலிகளின் அணிகள், படைத்துறைச் செயலக அணிகள், இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,அரசியற்துறை அணிகள் மற்றும் சிறப்பு வேவுப் பிரிவு ஆகிய அணிகள் இச்சமரில் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்தன.
இவ் வெற்றிகர முறியடிப்புச் சமரை விடுதபை் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்தினார்.பால்ராஜ் அவர்கள் பாரிய விழுப்புண்ணடைந்ததும்.
மூத்த தளபதி பொட்டு அவர்கள் தொடர்ந்து களமுனையை வழிநடாத்தினார்.இச் சமரில் ராங்கியில் இருந்த ஜம்பது கலிபர் ஆயுதத்தை கழற்றச் சென்ற மேஜர் பிறேம்நாத் அவர்கள் வீரச்சாவடைந்தர்.(1993 ஆண்டு முதன் முதலாக இயக்கத்தில் கனரக ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டது அதன் பொறுப்பாளராக மேஜர் பிறேம்நாத் அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவ் வெற்றிகர முறியடிப்பச் சமரில் லெப் கேணல் நாயகன் அவர்கள் உட்பட எண்பத்தி நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.இத் தாக்குதலுக்கு பழி தீர்க்குமுகமாக இலங்கை விமானப் படையினர் சங்கத்தானை மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடாத்தி தனது பழியைத் தீர்த்துக் கொண்டது.