
நம் முன்னோர்கள் பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணங்களும் உடல் ரீதியில் பல்வேறு நன்மைகளை தரும் என கூறி வந்தனர். ஆனால் இந்த காலக்கட்டத்தில் இருக்கின்ற பெண்களுக்கு ஆபரணங்கள் அணிவதன் நன்மைகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. தெரியமாலேயே பெண்கள் ஆபரணங்கள் மீது நாட்டம் கொள்கின்றனர்.

நம் பெரியவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருந்தது. பழங்காலத்திலிருந்தே, பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பாரம்பரியம் இருந்து வருக்கிறது. வெள்ளி கொலுசு அணிவது உங்கள் பாதங்களை அழகாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
- கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை வெள்ளி கொலுசு தூண்டிவிடும்.
- கர்ப்பப்பை இறக்க பிரச்னையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
- வெள்ளி கொலுசு பெண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். உடல் சூட்டை குறைக்கும்.
- பெண்களின் குதிகால் நரம்பினைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் குதிகால் பின் நரம்பின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
- பெண்களின் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலியினை தடுக்க கொலுசு பயன்படுகிறது.
- கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு கால் பலமிழந்து போவதையும் தடுக்கும்.
- உடலில் நோய் அதிகரிப்பு சக்தியை அதிகரிக்கும்.
- முக்கிய சுரப்பிகளிளை சமநிலையாக வைத்திருக்கவும் கருப்பபை ஆரோக்கியத்திற்கும் உதவும்.

🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.