நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.
இந்திய வல்லாதிக்க அரசிற்கு எதிராக, சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய லெப். கேணல் திலீபன் அவர்களின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 28.09.2025 அன்று, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடனங்கள், கவிதைகள், எழுச்சிப்பாடல்கள், உரைகள் நடைபெற்றன, அத்தோடு அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவை நடாத்திய தேர்வில் அதிதிறன் பெற்ற அன்னைபூபதி மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
இவற்றோடு பார்த்தீபன் பசியோடு என்ற கவிதைத்தொகுப்பு நூலும் நோர்வே தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது இந்நூலில் நோர்வே வாழ் தமிழ் எழுத்தாளர்கள் உட்ப்பட உலகத்தமிழ் எழுத்தாளர்களின் கவிதைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







