நேரலை LIVE🔴திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !
இடம் : திருக்காட்டுப்பள்ளி (குடமுருட்டி பாலம்)
நாள் : 03-10-2025 (மாலை 4 மணியளவில்)
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். தியாகத்தின் பேரடையாளமாக விளங்கும் எமது விடுதலை களத்தின் நெருப்பு, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்பே நடத்த திட்டமிட்டு இருந்தோம். பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தள்ளிப்போன, வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை மேற்கண்ட இடத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹிமாயின் கபீர், மாநில பொருளாளர் மருத்துவர் பாரதிசெல்வன், அண்ணன் மணிசெந்தில், மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், மகளீர் பாசறை பொறுப்பாளர்கள், எழிலரசி மற்றும் தேன்மொழி ஆகியோர் பேச இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க உரையை நிகழ்த்த சாட்டை துரைமுருகன் அவர்கள் வருகை தந்து பேச இருக்கிறார்.
இந்நிகழ்வை திருவையாறு சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் விரிவான முறையில் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்கள். இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு இந்த கூட்டத்தை, அதன் நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
திருவையாறு சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி