அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பண்டாரகமை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை – பண்டாரகமை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சாரதிகள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த டிப்பர் வாகனங்கள் முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.