இலங்கையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருளுடன் 3,264 பேர் கைது!

இலங்கை

நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1045 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1149 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 35பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 910 பேரும், கஞ்சா செடிகளுடன் 32 பேரும், போதை மாத்திரைகளுடன் 76 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 836 கிராம் 082 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 074 கிராம் 786 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 33 கிலோ 38 கிராம் 581 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 12 கிலோ 314 கிராம் 148 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 97870 கஞ்சா செடிகளும், 7881 போதை மாத்திரைகளும், 2221 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *