
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய தேவையில்லை. தவறு செய்தவர்கள், பாதாள குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கடைந்துள்ளமை நன்றாக தெரிகிறதென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (04.10.2025) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சட்டத்தின் பிரகாரம் பொலிஸார் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் அதிகாரிகள் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு ஊழல்வாதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகிறது. சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.
ஊழல்வாதிகள் மற்றும் அரச நிதியை மோசடி செய்தவர்களை கைது செய்யும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.
பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட பாதாள குழுக்களின் உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வந்த தினத்தில் இருந்து எதிர்கட்சினர் கலக்கமடைந்துள்ளார்கள். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தரே பத்மே உட்பட ஏனையவர்கள் பயன்படுத்திய 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய தேவையில்லை. தவறு செய்தவர்கள், பாதாள குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கடைந்துள்ளமை நன்றாக தெரிகிறது என்றார்.