லெப். கேணல், புலேந்திரன் லெப்.கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

பிரித்தானியா

லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது, தென்மேற்கு இலண்டன் பகுதியில் உள்ள Mitcham
எனும் இடத்தில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (05/10/2025) மாலை 6 மணி அளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

நிகழ்வில் பொதுச் சுடரினை நடன ஆசிரியை சுகி  ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை லெப்ரினன் கேணல் புலேந்திரன் அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை நடன ஆசியை சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தினை தொடர்ந்து, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை திருமதி றயனி  மற்றும் திருமதி சுபாசினி அவர்கள் அணிவித்திருந்தார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.

தேசியக்கொடி கையேந்தலுடன் , மாவீரர்களின் கனவு நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *