
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன.
அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதற் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள்.
அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.
முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு நாள் (10.10.2025) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.