இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவில், மனித – விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, அம்மாநில அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில், மனித – விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பது, காட்டு யானைகள் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972ல் திருத்தம் செய்து, கேரள வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டம் – 2025 என்ற மசோதாவை, கேரள சட்டசபையில் அம்மாநில அரசு நிறைவேற்றி உள்ளது.

இந்த திருத்த மசோதா, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக அமலுக்கு வரும்.

வயநாடு நிலச்சரிவு தொடர்பான மறு சீரமைப்பு பணிகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியான, 2,221 கோடி ரூபாயை உடனடியாக வழங்கும்படி பிரதமரிடம் பினராயி கோரிக்கை வைத்தார். மேலும், கேரளாவின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் விவாதித்தார்.

மசோதா:

மனிதர்களை தாக்கும் அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையும் வனவிலங்குகளை சுடவோ அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவோ உத்தரவிட, தலைமை வனவிலங்கு காப்பாளருக்கு அதிகாரம் அளிக்கிறது மாவட்ட கலெக்டர் அல்லது தலைமை வனப்பாதுகாவலரின் அறிவுறு த்தலின்படி, தீவிர காயங்களை ஏற்படுத்தும் விலங்குகளை கொல்லவோ, மயக்க ஊசி செலுத்தவோ, பிடிக்கவோ அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ தலைமை வனவிலங்கு காப்பாளர் உடனடியா க உத்தரவிடலாம் கொலை செய்வதை தவிர, மாற்றுவழியில் காட்டு வில ங்கின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு அதிகாரம் அளிக்கிறது மத்திய வனவி லங்கு பாதுகாப்பு சட்டத்தின், அட்டவணை – 2ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு காட்டு விலங்கையும், குறிப்பிட்ட காலத் திற்கு கொடிய விலங்காக அறிவிக்க இந்த மசோதா, மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *