சூடானின் வடக்கு தர்பூர் மாகாணத்தில் உள்ள அல்-பஷீர் நகரை குறிவைத்து துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

தர்பூர்

சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் இலட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர்.

இந்நிலையில் சூடானில் வடக்கு தார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *