நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025

நெதர்லாந்து

தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன். முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி ,

லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் கேணல் சங்கர் ,கேணல் ராயூ ,லெப்.கேணல். சந்தோசம் ,லெப்.பரமதேவா ,லெப்.கேணல். நாதன்,கப்டன் கஜன் 

ஆகியோரின் நினைவுகள் சுமந்து எழுச்சி வணக்க நிகழ்வு நெதர்லாந்தில் நடைபெற்றது 

வட  தமிழீழம் யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில்  1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். தமிழீழ விடுதலைப் புலிகளின்  போராட்ட வரலாற்றில் முதற்  பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலை     எடுத்தியம்ப காரணமாக அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்  மகளிர் அமைப்பு 1985 ஆகஸ்ட் 18 அன்று  தொடங்கப்பட்டது ஆகவே   மகளிர் அமைப்பின்   40 ஆவது  ஆண்டு   நிறைவு  மற்றும்   தமிழீழப் பெண்கள் எழுச்சி   நாள் 2025 ஆகிய   நிகழ்வுகள்   அனைத்துலக ரீதியில்  உணர்வெழுச்சியுடன்    நடைபெற்ற  நிலையில் 

நெதர்லாந்தில்   சிறப்பு    வெளியீடாக   அனைத்துலகத்  தொடர்பகத்தின்   மகளிர் அமைப்பினரால்   வெளியீடு   செய்யப்படும் சூரியப்புதல்விகள் பாகம்  இரண்டு   பாடல் தொகுப்பு  வெளியீடு  செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *