வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியத்தில் 12.10.2025 14:30 மணிக்கு இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசிய கீதத்துடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் சுடர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரதான உரையுடன் சூரியப்புதல்வி பாகம்-2 இசைப் பேழை வெளியீடு செய்யப்பட்டது.
இசைப் பேழையின் பாடல்களுடன் பாடலின் விளக்க உரைகளும் மகளிர் உறுப்பினர்களால் உரையாற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து 2ம் லெப்.மாலதி அவர்களின் வரலாறு சார்ந்த சிறப்புரைகளும் எழுச்சிப்பாடல்கள், கவிதை,பேச்சு என பல நிகழ்வுகளுடன் ஈழத்தமிழர்கள் நிறைந்த மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலைத் தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழரின் தாரகமந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.