
இன்று | கரிநாள் |
15 அக்டோபர் 2025 புதன் | |
தேதி | 29 – புரட்டாசி – விசுவாவசு புதன் |
நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | மூலம் பூராடம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | கன்னி லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 29 |
சூரிய உதயம் | 06:02 கா / AM |
ஸ்ரார்த திதி | நவமி |
திதி | இன்று மாலை 03:24 PM வரை நவமி பின்பு தசமி |
நட்சத்திரம் | இன்று மாலை 05:11 PM வரை பூசம் பின்பு ஆயில்யம் |
சுபகாரியம் | கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன் | 15 அக்டோபர் 2025 புதன்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் குறையும். தியானம் மன நிம்மதியை தரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப நபர்களின் செயல்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நட்பு வட்டம் உருவாகும். கடன் நெருக்கடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே, புதிய முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். பெற்றோர்கள் அன்பு பாராட்டுவர். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடையும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி ராசி அன்பர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

துலாம் ராசி நேயர்களே, ஆன்மீக ஆர்வம் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

விருச்சிக ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். யாருக்கும் எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே, முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மகர ராசி அன்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். மன பிரச்சனைகள் வெகுவாக குறையும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்யோக மற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்ப ராசி நேயர்களே, வேண்டியவர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்கவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் – 13-10-2025 To 19-10-2025

மேஷ ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் ஆதரவால் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தினரின் பாசமும் நல்ல விதமாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதும் அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு, மனை, ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய கொள்ளவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் இருக்கும். எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். குடும்ப பெரியோர் ஆசியும், மகான்களின் தரிசனமும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்

ரிஷப ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் அதிகம் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களால் அனுகூலமான பலன் கிட்டும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்ப செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் பல பணிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்

கடக ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும். வீடு, வாகனம், தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். குடும்ப வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்யவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போகவும். சிலருக்கு புது வீடு வாங்கும் யோகமும் அமையும். பெரியோர்களின் அன்பும் ஆசியும் கிட்டும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. வெகுகாலம் எதிர்பார்த்திருந்த தனவரவு தானாகவே வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் அதிக பலன்கள் கிடைக்கும். வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் அமைந்திருக்கும். தூரத்து உறவினர்கள் வகையிலும் நற்செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் ஒரு சில புது மாறுதல்கள் ஏற்படும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கடன் தொந்தரவு நீங்கும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

கன்னி ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்ட முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும். உறவினர்கள் உதவி கேட்டு உங்களிடம் வருவர். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிப்படவும்

துலாம் ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருவதற்கான வழிகள் வந்து சேரும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரியமானவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு கவலைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். எதிர்பாராத விதமாக நெருங்கிய உறவினர் ஒருவர் தேடி வந்து உதவிகளை செய்து தருவார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயலை செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள் சிலரால் மனக்கசப்பு ஏற்படலாம். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு பின் சீராகும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி விரைவில் வந்து சேரும். பயணங்கள் ஓரளவு தான் நன்மையே தரும் என்பதால் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். குடும்பத்தாருடன் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். பிரியமானவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். பெற்றோரின் உடல் நிலை மேம்படும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிப்படவும்

மகர ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும். குடும்பத்தில் முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். புது நபர்களிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்

கும்ப ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். வாக்கு வன்மை கூடும். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்த முடியும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ய்வ பக்தி அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பெற்றோர்கள் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். பிரியமானவர்கள் வழியில் நன்மை ஏற்படும். உற்றார், உறவினர்கள் பாச கரம் நீட்டுவர். புது வீடு மாற்றம் ஏற்படும். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே
இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதார வளர்ச்சி நிலை சிறப்பாகவே இருக்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்க முடியும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உடல் நலத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டு பின் சீராகும். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : சாஸ்தாவை வழிபடவும்.
தமிழ் மாத ராசி பலன்கள் |
(01.10.2025 முதல் 31.10.2025) விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 15ம் தேதி முதல் ஐப்பசி மாதம் 14ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-10-2025 முதல் 31-10-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். (2025) அக்டோபர் மாதம் கிரக நிலை மாற்றம் : 03.10.2025 – துலாம் – புதன் 09.10.2025 – கன்னி – சுக்கிரன் 18.10.2025 – துலாம் – சூரியன் 27.10.2025 – விருச்சிக – செவ்வாய் ராசி பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology) (அலைபேசி: 09003019831) |
அக்டோபர் மாத ராசி பலன்கள் (2025)
மேஷ ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மனதில் துணிச்சலும், தன்மைபிக்கையும் பிறக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகமாகப் பாடுபடவேண்டியிருக்கும். குடும்பத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிவரும். எந்த ஒரு பிரச்சனையையும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்ள முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு வாகனம் வாங்குவது, விற்பது முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் இருந்தாலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சிற்கு நல்ல மரியாதை இருக்கும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்பது நன்மையை தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டுக் கொண்டு இருந்த காரியம் கைகூடும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் ஒரு சில தடைகளுக்கு வெற்றி பெரும். கடன் பிரச்னைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிரியமானவர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இரவு நேரங்களில் பயணிக்க போது கவனம் தேவை. உடல் உபாதைகள் நீங்கும். வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கும். நீண்ட கால முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். மாதம் முதல் நாளிலிருந்து பண விவகாரங்களில் கணக்கு போட்டு நடந்தால் நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும். குடும்ப விஷயங்களில் பிறர் தலையிடுவதால் பிரச்னைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு மற்றும் வாகனங்களால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாழ்வில் எதிர்பாராத தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் அது உடனடியாக சரியாகும். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்த்தால் வீண் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழகிக்கொள்ளவும். மருத்துவ செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். உங்களது செயல்பாடுகள் மற்றவர்கள் ஆச்சரியம் படுப்படியாக இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். புது நண்பர்களிடம் மிகுந்த கவனத்தோடு பழகுவது அவசியம். குடும்பப் பிரச்னைகள் சில நேரங்களில் கவலையை ஏற்படுத்தும். பொது பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் உங்களை வந்தடையும். மனதில் எதையும் சாதிக்க முடியும் என்ற ஆற்றல் பிறக்கும். பல புதிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இக்கட்டான நிலை நீங்கும். நெருங்கிய உறவினர்களால் சில பிரச்னைகள் வரும். நண்பர்களும் சில சமயங்களில் பகைவர்களாக மாறுவர். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. புதிய வீடு வாகனம் வாங்குகிற முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். யோகா, தியானம் மன அமைதிக்கு வழிவகுக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மற்றவர்களுக்காக தலையிட வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். மற்றவர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகும். சிக்கலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக முடிக்க முடியும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் ஒரு படி மேலே இருக்கும். உடல் நலம் மேம்படும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. திட்டமிடாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். எல்லாவற்றிலும் நல்ல மாற்றம் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி அன்பர்களே
இந்த மாதம் எல்லா விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பல நாட்களாக பட்ட கஷ்டங்களுக்கு நல்ல ஒரு விடிவு காலம் பிறக்கும். ஆன்மீக வழிபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். எதிலும் அவசரபடாமல் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், தவிர்த்தல் வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. புது பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வீடு, வாகனத்தை சீர்படுத்த அதிகம் செலவழிக்க வேண்டிவரும். எதிரிகளால் பெரியளவில் தொல்லைகள் இருக்காது. கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் காலதாமதன்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிக்கல் வரும். உறவினர்களிடையே இருந்த பகைமை பகைமை மாறும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புது வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 3,4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி அன்பர்களே
இந்த மாதம் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஆன்மிக பணிகளில் நாட்டம் கூடும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுவும். குடும்ப வாழ்வில் தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சாதமாக முடியும். தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்னைகளை தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெகுதொலைவில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் தனியாளாக சென்று எல்லாம் வேலைகளையும் செய்ய வேண்டிவரும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். வெளிநபர்களால் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஓரளவுக்கு சாதகமான பெற முடியும். அண்டை, மாநிலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளவேண்டிரும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மனநிறைவு உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததக இருக்கும், இருப்பினும் சிறப்பாக சமாளிக்க முடியும். மன வலிமை கூடும். உங்களை திறமைகளை வெளிபடுத்துவதற்கான பல சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். யாரிடத்திலும் அளவுக்கு அதிகமாக பேச வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்பு களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளவும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். மனதில் உள்ள குழப்பங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்ப அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். தேவையற்ற விஷயங்களுக்காக மனவருத்தம் அடையாமல் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பயணங்களால் நற்பலன் உண்டு. சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.கணவன்,மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண முயற்சிகளில் சின்ன தடங்கல் ஏற்பட்டாலும் அதன் பிறகு நல்ல வரன் அமையும். இது வரை தடைப்பட்டு இருந்த காரியம் மீண்டும் புத்துணர்வு பெரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அண்டை, அயலாரிடம் நட்பு உறவு ஏற்படும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் பல சுவாரசியங்கள் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பல அனுகூலங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதையும் நிதானமாக கையாள்வது நல்லது. எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். உஷ்ண சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்ப சிக்கல்களால் மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். உடன் பிறப்புகளிடம் சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு, வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் உண்டு. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். பல நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அண்டை, அயலாரின் உதவி கிடைக்கும். கணவன்,மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். அடுத்தவர்களிடம் வம்பு, சண்டைக்கு போகாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். யாரும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி அன்பர்களே
இந்த மாதம் பெரியளவில் மாற்றத்தைக் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது, மேலும் ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது நல்லது. அடுத்தவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் தவறாக புரிந்துக் கொள்வர். பழைய வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் வரும். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். பிரியமானவர்கள் வகையில் சில மனக்கஷ்டம் வரலாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். இரவு நேர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனமுடன் இருந்தால் அதிக சிரமங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருந்த டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி அன்பர்களே
இந்த மாதம் நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்திற்கு வேண்டியதை செய்துகொள்ள முடியும். எந்த சூழ்நிலையையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகள் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மன குழப்பத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளவும். நீங்கள் எதிர்பார்த்ததை போலவே எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தள்ளி போன காரியம் விரைவில் முடியும். கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியும். உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உங்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். நண்பர்களிடம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். குடும்ப அடிப்படை வசதிகள் பெரும். புதுமையான விஷயங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். குடும்ப நபர்களின் யோசனை கைகொடுக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கவும். முக்கிய காரியங்களை நேரிடையாக சென்று செய்து முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி அன்பர்களே
இந்த மாதம் பல புது திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த முடியும். குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டு. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வேண்டியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்பட வாய்ப்புண்டு. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. சில நேரங்களில் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களில் வீண் பழியை சுமக்க நேரிடும். குடும்பத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். தேக நலனில் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக முடியும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் வரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளால் மனநிம்மதி குறையும். மனக்கட்டுப்பாடு அவசியம். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் தர வேண்டாம். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உறவினர்கள் வருகை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். வெளியிடங்களில் எப்போதும் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி அன்பர்களே
இந்த மாதம் புதிதாக செய்ய விரும்பும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்க்கலாம் பற்றிய யோசனை அதிகம் இருக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். பல குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உற்றார், உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் இனிதே கைகூடும். பிராத்தனைகள் நிறைவேறும். வீட்டில் அவ்வப்போது தேவையற்ற செலவுகள் வரும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற அலைச்சல் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும். குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். உங்கள சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. விஐபிகளின் அறிமுகமும் அவர்கள் மூலம் நன்மை உண்டாகும். இழுபறியிலிருந்த கோர்ட் வழக்கு ஓர் முடிவுக்கு வரும். அடுத்தவர் நலனுக்காக உழைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் அதைத் தாண்டி வெற்றி பெறு முடியும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். பொருளாதார விஷயத்தில் கவனமுடன் செயல்படவும். மனதில் எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். எதிரிகள் பலம் பாதியாக குறையும். திட்டமிட்டபடி பயணங்கள் மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு தொடர்பால் நன்மை உண்டு. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உற்றார், உறவினர்களும் வீண் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். தனவரவு ஓரளவு இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். வதந்திகளை எப்போதும் பொருட்படுத்த வேண்டாம். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். நட்பு வழியில் நன்மை வந்து சேரும். தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்று வருவதால் உடல் சோர்வு ஏற்படும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடவும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் ஈகோ பிரச்சனை தலை தூக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்