1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்க மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, பேரினவாத சிங்கள இராணுவத் தளபதியாகப் பதவி ஏற்றார். பிரிகேடியர் வீரதுங்க வடக்கிலே இராணுவ ஒடுக்கு முறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு பேரினவாத சிங்கள அரசுக்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்குமுகமாகவே இவருக்கு இந்தப்பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியர் வீரதுங்க இராணுவத் தளபதியாகப் பதவி யேற்ற தினத்தன்று,

1981ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி லெப்டினன்ட் சார்லஸ் அன்ரனி (சீலன்) தலைமையில் விடுதலைப்புலிகளின் தாக்குதற் படையினர் யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர்.
விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதலில் இராணுவக்கோப்ரல் ஹேவவாசம், இராணுவச் சிப்பாய் திஸ்ஸர ஆகிய இரண்டு இராணுவப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் எதிரிகளின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பேரினவாத சிங்கள இராணுவப் படைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கெரில்லாத்தாக்குதல் இதுவாகும்.