அஞ்சலிச் செய்தி – திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)
பெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா) அவர்கள் மறைந்த செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட நிலைத்த போராட்டமும், தன்னலமற்ற பணியும்நிரந்தர நினைவாக எம்மிடத்தில் நிலைத்து நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்த துயரம் அவரை ஆழமாகப் பாதித்திருந்தது. சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டும் அவதிப்பட்டும் இருந்தபோதிலும், அவர் மனத்துணிவை இழக்கவில்லை.
இன்று நாம் ஒரு உண்மையான தேசபக்தரையும், மனிதநேயச் செயற்பாட்டாளரையும் இழந்துள்ளோம். அவரது நினைவும், தேசிய அர்ப்பணிப்பும் இனி வருங்காலத் தலைமுறைகளுக்குத் தூண்டுதலாக இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவரிடமும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
இறுதி வணக்கம், சிறீ அண்ணா.

— ஈழத்து நிலவன்
14/10/2025