தமிழ்த் தேசியத்தின் வரையறை என்பது “தமிழர் தலைமையா? தத்துவ தலைமையா?” – தமிழம் செந்தில்நாதன்
தமிழ்த்தேசியத்தின் வரையறை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது மேலெழுந்து வருகிறது. குறிப்பக தன்னுடைய, விருப்பத்திற்கு ஏற்ற வரையறைகளை அவரவர் வகுத்துக்கொண்டு, அதற்குள் எல்லோரும் அடங்கிவிடவேண்டும் என்று கூத்தாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பாரதியஜனதா கட்சி தன்னுடைய இந்துத்துவா தன்மையை மறைக்க ஒரு தலித்தை குடியரசு தலைவராக்கியது போல, வன்னியர் சங்கமாக இருந்து பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறிய பாமக ஒரு தலித்தை கட்சியின் முக்கிய பொறுப்பை கொடுத்து தன்னுடைய பின்னணியை மறைத்து கோவத்து போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தன்னுடைய கட்சியில் பிற குடி தமிழருக்கு ஒரு பொறுப்பை கொடுத்து தன்னை மறைத்துக்கொள்வது போல, தன்னுடைய குடுமியை இந்துத்துவாவின் கைப்பிடிக்குள் கொடுத்துவிட்டு, வெளிப்படையாகவே இந்துத்துவாவின் தமிழக கிளையாக மாறிப்போன எ(ட்)டப்படியார் தமிழர் தலைமையாக மாறி போயி நிற்கிறார் என்று சில அரைவேக்காடுகள் பதிவுகளை காணமுடிகிறது.
இதுகுறித்து பேசுவதற்கு முன்னாள்…
தேசியம் என்றால் என்ன ?…
Nationalism is the belief in loyalty and devotion to one’s nation, which is often defined by a shared history, culture, or language. ( மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை தனித்துவமாக கொண்ட ஒரு இனத்தின் இறையாண்மை பொருந்திய கூட்டுணர்வு என்பது தேசியம்)
மேற்கண்ட வரையறை என்பது ஒரு பொதுவான வரையறை. இதனுடைய அரசியல் வடிவம் எப்படி கொடுக்க படுகிறது என்று உற்றுநோக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த கூட்டுணர்வை முன்னிறுத்த அந்த அரசியல் கட்சி எதை முன்னிறுத்தி தனது மக்களை ஒன்றிணைக்கிறது ? எதை முன்னிறுத்தி தன்னுடைய அரசியல் கட்சி கோட்பாடுகளை வரையறை செய்கிறது ? எதற்க்காக போராடுகிறது என்ற வரையறையே எது தமிழ்த்தேசிய அரசியல் கட்சி என்பதை முடிவு செய்யும்.
மிக எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில்…!
எனது அரசியல் கட்சியின் தத்துவம் “மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றோடு” கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா ? அல்லது வேறு ஏதாவது ஒன்றை உள்நோக்கமாக வைத்து செயல்படுகிறதா ? என்ற கேள்வி தேசிய உணர்வை வரையறுக்க பிரதானமாகிறது.
அல்லது தத்துவமாக கட்டப்படவில்லை, அந்த கட்சி ஆரம்பிக்கப்படும் போது அதில் கவனம் இல்லை என்றால் கூட, மொழியுரிமை பறிக்கப்படும் போது, இந்த மண்ணில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் போது, தமிழர் தலைமைகள் இருக்கும் கட்சி போராடி இருக்கிறதா ? என்ற கேள்வி பிரதானமாகிறது.
இந்த இரண்டு கேள்விக்கும் எ(ட்)டப்படியார், தேசியவாதிகள் சொல்லுகின்ற பதில் என்ன ?
திமுக என்ற கட்சி உண்மையில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது. தமிழர் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் கலாச்சாரத்தை திட்டமிட்டு அழித்து, விஜயநகர வடுக வாரிசுகளின் மறைமுக அபிலாசைகளை நிறைவேற்றிவருகின்ற கட்சி. எனவே தமிழ்த்தேசியம் திமுகவிற்கு நேரெதிரானது.
மற்றக்கட்சிகளை பட்டியலிடுங்கள்…!
பாமக, விசிக, இன்னும் பல்வேறு கட்சிகள் இறுதியாக அதிமுக இப்படி ஏதாவது ஒரு கட்சி மேற்கண்ட தமிழ்த்தேசிய கூறுகளான மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்றினை தத்துவத்தின் வடிவிலோ அல்லது போராட்டத்தின் வடிவிலோ கொண்டிருக்கிறதா ? என்ற கேள்விக்கு உங்களால் துணிந்து பதில்சொல்ல முடியுமா ?
தமிழ்த்தேசிய தத்துவம் பெருங்கடலை போன்றது, அதில் நீங்கள் சொல்லுகின்ற எவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும்.
விடுதலை உணவர்வுகளோடு நமது முன்னவர்களாக இருக்கின்ற பொன்பரப்பி தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கையாண்ட வழிமுறையும் ஒருவகையான தமிழ்த்தேசிய வடிவம். தனிநாடு கோரிக்கை மட்டுமே முழுமையான தமிழ்த்தேசியம் என்று வாத்திடுகிறவர்கள் பக்கம் உண்மை இருக்கிறது. ஆனால் அது முழுமையல்ல. அது ஏதுமற்ற நிலையில் உருவாவது.
இந்த இந்தியத்தின் பிடியில் இருக்கிறோம், மாநில அரசு அதிகாரம் என்ற குறைந்த பட்ச அதிகாரத்தை கூட, நம்மிடம் இருந்து வடுக வாரிசுகள் கபட நாடகம் ஆடி எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த புள்ளியில் இருக்கிற நாம் தனிநாடு கோரிக்கை என்ற நிலையில் போராடுவதா ? அல்லது நெடுநாள் திட்டமாக அதை வைத்துக் கொண்டு குறைந்த பட்ச மாநில தன்னாட்சி State federalism (is a system of government where power is constitutionally divided between a central (federal) government and regional (state) governments)என்ற நிலையில் உள்ள அதிகாரத்தை தமிழ்த்தேசியம் பிடிப்பதா ? Complete independence (a country has full sovereignty, meaning it is not subject to any other nation’s authority) என்ற நிலையை நோக்கி நகர்வதா ? என்ற கேள்விகளுக்கு பதிலாக அதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறாக நம் கண்முன்னே இருவர் இருக்கிறார்கள். தோழர் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் போன்றோர்களின் வரலாறு நமக்கு சொல்லித்தருகிறன்ற பாடம் இதுதான்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியத்தை வெறுத்து பூரண விடுதலையே தமிழ்த்தேசியம் என்ற நிலையில் வெகுகாலமாக போராடிவருகின்ற தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் போன்றோர்கள் கூட, தற்போதைய நிலையை அவதானித்து கூட்டரசு கோட்பாடு (Theory of Confederation) என்ற நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். போராடுவோம் வெற்றிபெற என்ற நிலையில் தத்துவம் இல்லை எனும் போது, உயிர்பிழைத்தாவது இருப்போம் போராட என்ற நிலை அதி முக்கியமானது. இந்த இரண்டாம் நிலை நகர்வுதான், குறைந்த பட்சம் மாநில அதிகாரத்தையாவது தமிழ்த்தேசியம் பெருவது என்ற நிலை !
உங்களுக்கு உடனே வருகின்ற கேள்வி… எடப்பாடி தமிழர் இல்லையா ? என்பதுதான். தமிழராய் இருப்பது வேறு, தமிழ்த்தேசிய தத்துவத்தின் தலைவராக இருப்பது வேறு !
தமிழ்த்தேசியத்தின் பல்வேறு கூறுகளில் ஒன்று, அவர் தமிழராக இருக்கவேண்டும் என்பது, ஆனால் அதுவே ஒட்டுமொத்தமா ? என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது ? அப்படி பார்த்தால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த காமராஜர் கூட பச்சை தமிழர்தான். அவர் தமிழ்த்தேசிய வாதியா ?
சரி எடப்பாடிக்கு வருவோம்…!
எடப்பாடி மத்திய பாஜக அரசின் தமிழக தமிழக செயல்திட்டத்தின் முகமா ? இல்லை தமிழ்த்தேசியத்தின் முகமா ? சொல்லுங்கள். உங்கள் மனதில் ஏற்கனவே ஏற்றிவைத்திற்கும் எல்லா சார்புநிலையையும் தூக்கி எறிந்துவிட்டு நடுநிலைமையோடு அணுகினால் எடப்பாடியார் யார் என்று உங்களுக்கு தெரியும்.
திமுகவை வீழ்த்த வேண்டும், அதற்கு வலுவான (வலுவாக இருந்தால் எதற்கு தவெக விடம் மண்டியிட்டு கிடக்கிறது) எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்கவேண்டும் என்று பேசினால் கூட அதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் அவர் “தமிழர் தலைமை” என்று சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது ?
“தமிழர் தலைமை” அவர் ஆகவே தமிழ்த்தேசியர்கள் இந்துத்துவத்தின் முகமாக இருக்கிற அவரை ஆதரிக்க தத்துவ பாடம் எடுக்கின்ற தத்துவ வாதிகள். அதிமுகவில் இருந்து பிரிந்துபோன அமமுக அணி, ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணியை ஒன்றிணைக்க ஏதாவது முயற்சி எடுத்தால் கூட நல்லது.
தமிழ்த்தேசியத்திற்கு என்ற அடிப்படை கூறுகளான மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை அதிமுக என்ற கட்சி தத்துவமாகவும் கொண்டிருக்கவில்லை, போராட்ட வடிவத்தின் கூறுகளாகவும் கொண்டிருக்கவில்லை எனும்போது, அவரை தமிழர் தலைவராக எப்படி பார்க்கிறீர்கள் ? இன்னும் சொல்லப்போனால் அதிமுக என்ற கட்சிக்கு எடப்பாடியே தலைவரில்லை. இந்துத்துவாவின் கோரமுகமான அமித்ஷா தானே தலைவர். இதெல்லாம் பேசுகின்றவர்களுக்கு தெரியாதா என்ன ?
காலந்தோறும் யாருக்காவது அடிமையாக இருந்து ஒரு கட்சியின் தலைவன் வேண்டுமெனில் வேலைசெய்யலாம். தத்துவம் அப்படி செய்யாது. இன்னும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை மிக சுருக்கமாக வரையறுக்க வேண்டுமென்றால் திமுக என்ற கட்சிக்கு ஒரு விசிக மாதிரி, பாஜக என்ற கட்சிக்கு அதிமுக. திருமாவளவன் கூட தன்னுடைய அதிகார விருப்பத்தை விட்டுவிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒருபோதும் எடப்பாடியால் பாஜாகாவை உதறித்தள்ளவே முடியாது. அப்படி பாஜகவை விட்டு வெளியேற எடப்பாடி நினைத்தால் அதிமுக என்ற கட்சியில் அண்ணாமலை தலைவராக மாறிவிடுவார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசியம் என்ற தத்துவ அரசியலுக்கு யாரும் உரிமை கோரமுடியாது என்றலெல்லாம் சில பதிவுகள் காணமுடிகிறது…!
ஆனால் நூறு பேரு ஒன்றாக நின்றாள் கூடா ஒரு பிள்ளை தன்னுடைய தகப்பன் யார் என்று தெரிந்து ஓடிவந்து கட்டிப்பிடித்து உரிமை கொண்டாடும்.
அப்படித்தான் தமிழ்த்தேசியம் என்ற கூட்டுணர்வு. தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவைகளை வைத்து ஒரு கட்சியின் தத்துவம் கட்டப்பட்டிருக்கிறதா என்று பார்க்கும், அதே நேரத்தில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என்பதன் மீட்சிக்காக போராடி கொண்டிருக்கிறதா என்று பார்க்கும். இந்த இரண்டின் அரசியல் வடிவமாக இருக்கின்ற நாம் தமிழர் கட்சியையே தமிழ்த்தேசிய கூட்டுணர்வு நோக்கும். என்பதை அடிப்படையாக புரிந்துகொள்ள வேண்டும்.
நாளை அமித்சா அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டால், அதிமுக குஜராத்தி தேசிய உணர்வை பிரதிபலிக்குமா ?
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை “தமிழர் தலைவர்” என்று சொல்லுவதும், அவரை ஆதரிக்க கோருவதும் வெளிப்படையான “குடிதேசியமே” தவிர “தமிழ்த்தேசியம் அல்ல” !
மற்றபடி உங்கள் உருட்டுகளில் எட்டப்படியார் நிற்க வாழ்த்துக்கள்
